ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம் ‘எந்திரன்’. ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.
ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது.
ரஜினி,ஐஸ்வர்யா,ஷங்கர்,கலாநிதிமாறன்,தயாநிதிமாறன்,வைரமுத்து,ஏ.ஆர்.ரகுமான்,சிம்பு,
ஜெயம்ரவி,விவேக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் விவேக் ரஜினிக்கு வரவேற்பு ராப் பாடல் பாட ரஜினி மேடையேறினார்.
ரஜினி முதன்முறையாக ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லி பேச
’’எந்திரன் படம் நிச்சயம் தமிழ்த்திரையுலகில் புதிய சரித்திரம் படைக்கும் என்பது உறுதி. ஹாலிவுட் தரத்திற்கு இந்தப்படம்
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. நான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன்பு ஷங்கர் பற்றி கமலிடம் கேட்டேன். அதற்கு அவர், ஷங்கர் அற்புதமான இயக்குநர். இருந்தாலும் எந்திரன் படத்தில் என்னால் நடிப்பது கஷ்டம் என்று கூறிவிட்டார்.
அதற்கு பிறகுதான் நான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் இந்தப்படத்தில் என் சொந்த அறிவை பயன்படுத்தி நடிக்கவில்லை. இயக்குநர் ஷங்கர் என்ன சொன்னாரோ அதன்படி நடித்து கொடுத்திருக்கிறேன்.
இப்படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாராய்
அறிவாற்றல் நிறைந்த அழகான பெண். அவர் உலக அழகி. உலகி என்றாலும், இதற்கு முன்பு எத்தனையோ உலக அழகி இருக்கிறார்கள். இதற்கு பிறகும் எத்தனையோ பேர் வருவார்கள். ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு நிகர் இருக்க முடியாது.

அவருடன் முதல் இரண்டு நாட்கள் நடிக்கும் போது எனக்கு என்னவோ போல் இருந்தது.
நடிகைதான் என்றாலும் என்னால் நெருங்கி நடிக்க தயக்கமாக இருந்தது. நெருங்கி நடித்த போது, அமிதாப்பச்சன் வந்து ‘ரஜினி வேண்டாம்..’ என்று எச்சரிக்கை செய்வது போல் இருந்தது. (வாய்பொத்தி விழுந்து விழுந்து சிரித்தார் ஐஸ்) அவர் எனக்கு ரொம்ப வேண்டியவர். அதனால் தடுமாற்றமாக இருந்தது.
அப்புறம் இரண்டு நாள் கழிந்ததும் எல்லாம் சரியாகிவிட்டது.(அரங்கத்தில் கல கல)எம்.ஜி.ஆருக்கு வாலி எப்படியோ;அப்படித்தான் எனக்கு வைரமுத்து. அவர் எனக்கு எழுதிய பாடல்களை பார்த்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கு. அந்தப்பாடல்களுக்காகவே கொஞ்சம் வாழ்ந்திருக்கிறேன்.

கலாநிதிமாறனை பார்க்க எத்தனையோ சினிமா ஸ்டார்கள் காத்திருக்கிறார்கள். ஆனால்
அவர் சந்திப்பது எல்லாம் அரசியல் தலைவர்கள்; தொழிலதிபர்கள்தான். அவர் இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் நெம்பர் ஒன் தொழிலதிபராக வருவார்’’என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக