திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கே.பிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு தீர்மானம்- டில்வின் சில்வா

 அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் மூலமுமான கே.பிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு தீர்மானம் செய்துள்ளதாக டில்வின் சில்வா தெரிவிக்கிறார்.
.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,கே.பி மீது குற்றங்கள் எதனையும் சுமத்தாது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடும் டில்வின் சில்வா, இதன் மூலம் கே.பிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஓர் இரகசிய உடன்படிக்கை உள்ளமை தெளிவாவதாகவும் கூறினார்.
அதேவேளை கே.பி. ஒரு தேசாபிமானி என வர்ணிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை எனவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.கே.பியை  பயங்கரவாதி என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னர் குற்றம் சுமத்தியிருந்த போதிலும் அரசாங்கம் அவருக்கு எதிராக குற்றப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

"தமிழீழ விடுதலைப் புலிகளுக்ககாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடம் சேகரிப்பதிலும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதிலும் பிரதானமான நபர் கே.பி. எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல முன்னர் தெரிவித்திருந்தார். தற்போது கே.பி. கைது செய்யப்பட்டு சரியாக ஒருவருடம் ஆகும் நிலையில் அதே அமைச்சர் கே.வி. தொடர்பான தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளார்.

07.08.2009 இல் கே.பி. கைது செய்யப்பட்டார். இத்திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? ஒரு குற்றத்திற்காகக்கூட அவர்கள் குற்றப்பத்திரம் தாக்கல்செய்யவில்லை"  என ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் நீதி நியாயம் இல்லை. ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு என்ன நடந்தது? தடுப்புக்காவலில் உள்ள ஒருவர் எப்படி பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பிய ரில்வின் சில்வா, இந்த பேட்டிகளின்படி கே.பி. வடக்கிற்கும் சென்றுவந்துள்ளார் என்றார்.

கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி.யின் சொத்துக்கள் சட்டப்படி அரச உடமையாக்கப் பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடும் அவர், ஆனால் இதுவரையில் அவரது சொத்துக்கள் அரச உடமையாக்கப்படவில்லை எனவும் கூறினார்.

எனவே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டும், அப்படி ஆஜர்படுத்தப்படுவாரானால் அவரின் சொத்துக்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் அவருக்கு சொந்தான சொத்துக்களை கைமாற்றிக் கொண்டதன் அடிப்படையிலேயே அவர் சுதந்திரமாகவும், சகலவசதிகளுடனும் கவணிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை: