சனி, 7 ஆகஸ்ட், 2010

மனோ யார்!என்னை கட்சியில் இருந்து இடைநிறுத்த,பிரபா பொங்கி எழுகின்றார

“என்னை ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து இடைநிறுத்துகின்றமைக்கு மனோ கணேசனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.”இவ்வாறு பிரபா கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார். அரசுடன் இணைந்து கொண்டமை குறித்து  ஊடகம் ஒன்றுக்கு வழங்கி இருந்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து உங்களை இடைநிறுத்தி உள்ளார்கள் என்று கட்சித் தலைவர் மனோகணேசன் அறிவித்துள்ளாரென என வினவியதற்குத்தான் அவர் இவ்வாறு பதில் தந்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
”நான் அக்கட்சியை ஆரம்பித்து வைத்த ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவன்.கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. எனவே மனோவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு எதிராக எந்தெந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ,அந்தந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுத்தே தீருவேன்.”

கருத்துகள் இல்லை: