The assassination bid on Sheikh Hasina was foiled after a joint team of Indian ... An attempt on Bangladesh Prime Minister Sheikh Hasina's life, ...ஞா. சக்திவேல் முருகன்
:
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா படுகொலை திட்டத்தில் இருந்து தப்பி
பிழைத்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. சிறப்பு பாதுகாப்பு
படையின் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இடமாற்றியதில் படுகொலையில் இருந்து
தப்பித்து இருக்கிறார் ஷேக் ஹசீனா. இந்தத் தகவலை பங்களாதேஷ் தேசிய
பாதுகாப்பு புலனாய்வு அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
பங்களாதேஷில் ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளம் (JMB) என்ற தீவிரவாத
அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசியல் தலைவர்களை படுகொலை
செய்யும் முயற்சியிலும், பல பகுதியில் குண்டுவெடிப்பையும் நிகழ்த்தி
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்கள் கடந்த மாதம்
ஹேக் ஹசீனாவை படுகொலை செய்ய முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்
ஷேக் ஹசீனா அலுவலகத்தை சுற்று வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், ஹசீனாவின்
பாதுகாப்புப் படையை திசை திருப்பியும் அவரைப் படுகொலை செய்யவும்
திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்துக்கு சிறப்பு பாதுகாப்பு படையை
சேர்ந்த வீரர்கள் சிலரும் உதவி செய்து இருக்கிறார்கள். ஆனால், இந்தத்
திட்டத்தில் இருந்து தப்பி பிழைத்திருக்கிறார் ஹசீனா.
இந்திய மற்றும் வங்காளதேச உளவுத்துறை அதிகாரிகளின் கூட்டுக் குழு ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்புக்கும், சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்தவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்களில் படுகொலை திட்டத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். உடனே இந்தத் தகவல் விசுவாசமான காவலர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். விசுவாசமான காவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஷேக் ஹசீனாவை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி இருக்கிறார்கள்.
சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்தும், விசாரணை செய்து வருவதாகவும் ஊடகங்களுக்கு தேசிய பாதுகாப்பு புலனாய்வு அதிகாரி தகவல் தெரிவித்து இருக்கிறார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக