ஞாயிறு, 16 ஜனவரி, 2022

சாதி சங்கங்கள் அதிகார கொட்டடிகள் ஆனது! .. பின்பு .அவை கட்சிகளாகவும்... அதிமுக அரசியலின் ஆரம்ப புள்ளி!

 Kathir RS  : சாதி சங்கங்கள் இந்த மண்ணில் கிட்டத்தட்ட நூறாண்டுகாலமாக இருக்கின்றன.
அவை பெரும்பாலும் உறவின்முறை நிகழ்வுகள்
சத்திரம் சாவடி சாப்பாடு போன்ற வசதிகளுக்காக தத்தமது சமூகத்தினரின் பயண வசதிகள் திருமண தொடர்புகள் போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டவை.
அவை பெரும்பாலும் உயர் சாதியினரால் அமைக்கப்பட்டவை.அயோத்திதாசர் ரெட்டைமலையார் முன்னெடுப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சங்கங்கள் அமைக்கப்பட்டன.
அவை பிற்காலத்தில் யாருக்கு வாக்கு செலுத்துவது என்ற சமூக முடிவுகள் எடுக்கவும் அரசிடம் சமூக நலன் வேண்டி கோரிக்கைகளை சேர்ப்பிக்கவும் பயன் பட்டன.
பெரியார் கூட அத்தகைய சங்கங்கள் நடத்தும் ஆண்டுவிழாக்களில் சென்று கலந்துகொண்டு தனது கொள்கைகளை பரப்பியதோடு அவர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார்.
அப்போதெல்லாம் சாதி அமைப்புகளும் சங்கங்களும் இத்தனை தீவிரமான சாதிவெறியோடு செயல்படவில்லை என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.அப்படி செயல்பட்டிருந்தால் பெரியார் அங்கே சென்றிருக்க மாட்டார்.
80களில் அதிமுக கட்சி அதிகாரத்தில் இருந்த போது இந்த சாதி அமைப்புகளுக்கு நேரடி அரசியல் சாயம் பூசப்பட்டது.மாவட்ட செயலாளர்கள் நியமனம் கான்ட்ராக்டர்கள் கல்லூரி ஓனர்கள் என சில குறிப்பிட்ட சாதிகளைச்செர்ந்தவர்கள் பலம் பெறத் தொடங்கினர்.விளைவு அவர்கள் சார்ந்த சமூகத்தினர் அதிகாரத்தைத்தேடி வரத்தொடங்கினர்.சாதி சங்கங்கள் அதிகாரத்தின் கொட்டடியானது.அவை பிறகு கட்சிகளாகவும் உருப்பெற்றன.
1967 திமுக ஆட்சிக்கு வந்த பின் உயர்கல்வித்துறையில் கொண்டுவந்த மாற்றங்களின் பயனால் பல முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி அரசுவேலை தனியார் வேலையென பரவலாக வேலைவாய்ப்புகள் பெற்று தனிப்பட்ட வாழ்விலும் சமூக அளவிலும் முன்னேறினர்.
பலருக்கு இன்.த மாற்றங்களை கொண்டுவந்த இயக்கத்தின் மீது  நன்றியுணர்வு இருந்தது. ஆனால் சிலருக்கு அது இல்லை..அவர்கள் மனங்களில் பெருத்த சிந்தனை மாறுபாடு ஏற்படத்தொடங்கியது.
அவர்கள் பெற்ற கல்வியறிவு அவர்களை வேறுவிதமாக சிந்திக்க வைத்தது.அவை பல அரசியல் சிந்தனையாளர்களை உருவாக்கின. ஆனால் அவர்களில் பலர் தன்முனைப்புள்ள சுயநல சிந்தனைகளைக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு  தங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல ஒரு அரசியல் தேவைப்பட்டது. திமுக போன்ற பெரிய கட்சியில் அதற்கு வாய்ப்பில்லலையாதலால் சாதிக்கட்சிகள் அவர்களுக்கு வசதியாகவும் உடனடி பலனளிக்கக்கூடியதாகவும் இருந்தன.
அப்படி உருவான கட்சிகள்தான் இந்த சாதிகட்சிகள்.அவற்றை சீராட்டி பாராட்டி சோறூட்டி வளர்த்த பெருமை அதிமுகவையே சாரும்.
1976 க்கு பிறகு 1989ல் ஆட்சிக்கு வந்த திமுகவை இரண்டரை ஆண்டுக்குள் ஆட்சியை கலைத்தத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளும் அதிமுவே ஆண்டது..கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக வின் சாதனைகளில் ஒன்றுதான் இந்த சாதிக்கட்சிகளும் சாதி அடிப்படையிலான உட்கட்சி பதவிகள் நியமனங்களும்.
சாதி சங்கங்களுக்கிடையே ஊற்றி வளர்க்கப்பட்ட பகையுணர்வு கொலைவெறி ஆகியன பற்றி எரிந்துகொண்டிருந்த காலத்தில்தான் 1996ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது..
அதற்குள் வெட்டியெறிய முடியாத அளவுக்கு சாதி அரசியல் தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்ந்து கிளைகளை பரப்பி பரந்து வளர்ந்திருந்தது.
அதிமுக பெற்றெடுத்த சாதிவெறிக் குழந்தையை திமுக மட்டுப்படுத்தி வைக்கத்தான் வைக்க முடிந்ததே தவிர முற்றாக அழிக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
கூட்டணிக்கட்சிகள் பார்ப்பன சதியில் சிக்கியதன் விளைவாக திமுக சாதிக்கட்சிகளின் பிடியில் சிக்கிய தேர்தலாக 2001 தேர்தலைச் சொல்லலாம்.
2001-2006 காலகட்டத்திலும் சாதி அரசியல் ஒரு க்ரோனிக் டிசீசாக தமிழ்நாட்டை முழுவதுமாக பற்றிக் கொண்டுவிட்டன.
2006-2011ல் திமுக அவர்களையும் அனுசரித்து கூட்டணிசேர்ந்து தேர்தலை சந்தித்தது. அது இன்றுவரை தொடர்கிறது.
இடைப்பட்ட காலத்தில. அந்த சாதிக்கட்சிகள் தங்களை பொது நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு இன்க்ளூசிவ் அரசியல் செய்து முதலமைச்சராகி இந்த நாட்டை ஆள படாத பாடு படுகின்றன.ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை.
சாதி பேரைச்சொல்லி சாக்கடை அரசியல் செய்தவர்கள் சந்தனத்தை தடவிக்கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தது எடுபடவில்லை..அது எப்போதும் எடுபடாது என்பது அவர்களுக்கு ஏனோ இன்னும் புரியவில்லை.
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒரு கட்சி சொல்கிறது தங்கள் கட்சித்தலைவரை திமுக முதல்வராக்க வேண்டுமாம்..அப்போதுதான் அவர்கள் திமுகவை நம்புவார்களாம்..
இதைவிட பெரிய அரசியல் வேடிக்கை  ஒன்று உண்டா..?
ஒரு கணக்குக்காகப் பார்த்தால் 80-90களில் சாதியை வைத்து அரசியலுக்கு வந்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாகவே செட்டில் ஆகியிருக்கிறார்கள்.
ஒருவர் கூட இதில் சோரம் போகவில்லை.
ஆனால் பாவம் அவர்களுக்கு ஒட்டுகள்தான் பெரிதாக கிடைக்கவில்லை ஒரு சிலரைத்தவிர.
அது கூட பெரிய கட்சிகளிடம் ஒன்றிக்கொண்டு பெற்ற வாக்குகளே தவிர தனியாக நின்று ஒரே ஒரு ஆணியைக் கூட பிடுங்க முடியவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளை ஒரு சிலருக்கு சாதகமாக மாற்றக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அதுதான் அவர்கள் அரசியல்  வியாபாரத்தின் USPயாகவும் பேரம் பேச முக்கியமான துருப்புச் சீட்டாகவும் இருந்து வந்திருக்கிறது.. இப்போதும் இருக்கிறது.
ஆனால் மக்களாட்சி அரசியலில் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகும். இது இப்படித்தான் நடக்கும்.
எப்படி 80-90 களில் கொஞ்சம் வாழ்வில் முன்னேறியதும் தன்முனைப்பு சாதிய அரசியலை அந்த முதல் தலைமுறை பட்டதாரி சமூகம் முன்னெடுத்ததோ அதே போல சம காலத்தில் சமூக வலைதளம் அந்த சிந்தனைக்களத்தை இன்னும் விரிவுபடுத்தியிருப்பதால் தன்முனைப்புள்ள பல எலீட் சாதியவாதிகள் அரசியல் பேசுவதாக நினைத்துக்கொண்டு இன்க்ளூசிவ் அரசியல் செய்யும் திமுகவின் மீது சேற்றை இரைக்கும் வேலைகளை செய்கிறார்கள்.
இவர்களால் இவர்கள் சமூகத்திற்கோ கட்சிக்கோ..ஏன் இவர்களுக்கோ துளி நன்மை விளையப்போவதில்லை..(ஆனால் விளையும் என நம்புகிறார்கள்)
எப்போதும் அருவருக்கத்தக்க வகையில் இவர்கள் எழுதிக்கொண்டே கிடப்பார்கள். இடையிடையே இவர்களது பொருளாதார எலீட் நிலையைக் காட்டும் போஸ்டுகளையும் போட்டுக்கொள்வார்கள்.
வெள்ளையா இருக்குறவன் பொய்சொல்ல மாட்டான் மாதிரி மேட்ருதான் இதுவும்.
வாழ்விலும் பொருளாதாரத்திலும் தன்னிறைவு அடைந்தபின்னர் சாதியைப் பிடித்துக் கொண்டு தொங்குவதோடு சாதியொழிப்பு, சமூகநீதி அரசியல் செய்யும் திமுகவை கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. ஆமாம் பொழுது போக்கு மட்டுமே..
அதாவது மேலை நாடுகளில் பெரிய பணக்காரர்கள் தூண்டில் கேப் ட்ராக் சூட் சேண்ட்விச் ப்ரொடீன் ஷேக்  ஆகியவற்றுடன் உதவியாளரை அழைத்துக்கொண்டு ஏரியில் மீன் பிடிக்கப் போவார்களே அதைப்போல.
இவர்களின் இன்னொரு முக்கியமான செய்கை...சாதியை இவர்கள் பக்கத்திலேயே வைத்துக்கொள்வார்கள்..அதாவது ஒரு பெட் டாக்ஐ போல..அதுவும் நன்றாக எல்லோருக்கும் தெரியும் விதமாக..வைத்துக் கொள்வார்கள்.
அப்போதுதான் அவர்களைப்பார்க்கும் உண்மையிலேயே களத்தில் நிற்கும் அவர்கள் பேசும் அரசியல் சார்ந்த தோழர்களை வசப்படுத்த முடியும்.அவர்கள் சிந்தனையிலும் நஞ்சைத்தூவ முடியும்.இதுவும் ஒரு வித மார்க்கெட்டிங் யுக்திதான்.
மேலும் வேறுயாராவது தங்களுக்கு எதிராகப் பேசினால் அவர்கள் தங்கள் சாதியை காட்டிக் கொள்ளாதவராக இருந்தால் கூட அவரை சாதிவெறியர் என முத்திரை குத்தமுடியும்.
உதாரணத்திற்கு X சாதியைச்சேர்ந்த எலீட் தன்னை ஒரு X என்று பட்டவர்த்தனமாக காட்டிக்கொண்டே களமாடுவார்.அவரை எதிர்த்து பேசுபவரும்  X சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தன்னை X என காட்டிக்கொள்ளாதவராக இருக்கும் பட்சத்தில் அவரை அந்த எலீட் X சாதிக்காரர்  Y என்றோ Z என்றோ அடையாளப்படுத்தி திட்டுவார்.அவரைப் பொருத்தவரை X ஆக இருந்தால் அவர் சொல்வதை ஏற்க வேண்டும் இல்லையா நீ X இல்லை.
எப்பேர் பட்ட அயோக்கியத்தனம் இது..
இதையும் நம்மால் தடுக்க முடியாது.காரணம் உலகம் இப்படித்தான் இயங்கும்.அரசியல் களம் இப்படித்தான் இயங்கும்.
எத்தனைதான் நன்மைகள் செய்தாலும் இவர்கள் வாய் குறை சொல்வதை நிறுத்தாது.காரணம் அதுதான் அவர்களது வாழ்வு.
திமுகவைப்பாராட்ட 1கோடி தொண்டர்களின் குடும்பங்களும் கட்சி சாராத சில கோடி மக்களும் இருக்கிறார்கள்..அந்த பெரும்பான்மை மக்களின் வாழ்த்துகளோடு, தூற்றுவதையே தொழிலாக வைத்திருக்கும் இத்தகைய தன்முனைப்பும் சுய அரிப்பும் சுய நலமும் கொண்ட எலீட்களின் கேரியர் பில்டிங் வேலைகளை இப்போது குத்தியது போல ஊமை குத்தா குத்திட்டு கடந்து போகலாம்.
எப்படிப்பார்த்தாலும் எந்த கால கட்டத்திலும் ஒரு 10% ஆட்கள் நம்மை திட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்..மீதி 90% மக்களின் நலன் கருதி இந்த 10% காரிய கிறுக்கர்களை சாதி வெறியர்களை டிஷ்யூ பேப்பரால் அழுத்தி துடைத்து டஸ்ட் பின்னில் போட்டு டம்பிங் யார்டுக்கு அனுப்பிவிட்டு..நம் அடுத்த வேலையை பார்க்கலாம்.
கதிர் ஆர் எஸ்
16-2-22

 

கருத்துகள் இல்லை: