எவிடென்ஸ் கதிர் : அன்பு நண்பர்களே! வணக்கம்.உணர்வின் உச்சத்திலிருந்து இதை எழுதுகிறேன்.
ஒரு பெரிய அளவிலான சர்வதேசிய விருது கிடைத்து இருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மனித உரிமை பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
அர்ப்பணிப்போடு என்னால் இயன்ற பணியினை செய்து கொண்டே வருகிறேன்.
நெருக்கடிகளும் சவால்களும் நிறைந்த பனி. ஆயினும் சோர்ந்து போய் விடவில்லை.
இந்த நிலையில்தான் இந்த விருது கிடைத்து இருக்கிறது.
ஆகவே இந்த நேரத்தில் என் ஆசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைத்து பார்க்கிறேன். நான் சார்ந்து இருக்க கூடிய எமது தலித் மக்களையும் ஏழை எளிய விளிம்பு நிலை மக்களையும் நினைத்து பார்க்கிறேன். எமது மக்கள் இல்லை என்றால் இந்த விருது எனக்கு சாத்தியம் இல்லை.அவர்கள்தான் எனது எஜமானர்கள்.இது வரை இந்த விருதினை உலக அளவில் நான்கு பேர் பெற்று இருக்கின்றனர்.அவர்கள் அனைவரும் மகத்தான பணியினை செய்து வருபவர்கள்.அவர்கள் வரிசையில் இணைந்து இருப்பது பெருமைக்குரியது.
இந்த விருது வழங்கும் விழா வருகிற 19 ஜனவரி 2022 மாலை 4.45 மணி அளவில் ஐரோப்பிய கவுன்சில் - பிரான்ஸ் மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது.ஐரோப்பிய கவுன்சிலின் பொது செயலாளர் விருது வழங்கி கவுரவிக்கிறார்.நான் ஏற்புரை ஆற்றுகிறேன்.இணையத்தில் நடக்கிறது.கொரானா முடிந்து சுமுக நிலை ஏற்பட்டவுடன் பிரான்ஸ் செல்லுகிறேன்.
எனது நலம் விரும்பிகள்,என் குடும்பத்தினர்,எவிடென்ஸ் குழுவினர் போன்றோரின் ஆதரவு இல்லாமல் இந்த விருதினை பெற்று இருக்க முடியாது.
அன்புடன்,
எவிடென்ஸ் கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக