Loganayaki Lona : திமுக ஆதரவு எனும் நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்கு பின் எடுத்த முடிவல்ல.
திமுக தொடர்ந்து ஏன் இந்த அதிமுக விடம் போய் தோற்கிறது?
அப்படி என்ன தான் அதிமுக செய்துருக்குது?
இனியும் இது தோற்றால் இங்கு மக்கள் நிலை என்ன ஆகும்?
என எனக்குள் ஏற்பட்ட கேள்விகளுக்கு வேலைகளுக்கிடையே,
,அரசியல் பேசாதே எனும் பல வசைகளுக்கிடையே விடை தேடி தேடி கற்றுக்கொண்டு கொடுத்த ஆதரவு!.
சிறு வயது முதல் கலைஞர் ஆட்சியின் நன்மையை பார்த்து உணரும் வாய்ப்பிருந்ததால்,
அது எளிதாக புரிந்தது..
ஸ்டாலின் எந்த வித அரசியல் காரணமும் இன்றி தொடர்ந்து பேசத்தெரியல , அப்பா போல் இல்லை போன்ற மொக்கை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு,
நிராகரித்து அநியாயமாக விமர்சிக்கப்பட்டபோதே அவர்க்கு கொடுத்த ஆதரவு தான்.
திமுகவினரை விமர்சிப்பது, சாதி மத அதிகார போதைப்பக்கமாக அவர்களில் பதிவு பார்த்தால் விமர்சிப்பதுண்டு.
ஒடுக்கப்படும் மக்கள் , ஏற்கனவே வெகுஜனத்தால் ஒடுக்கப்படும் கட்சி மீது அதிகாரத்துக்கு வந்த பின் ஏறி மிதிக்கும்படி விமர்சித்தால் எதிர்ப்பதுண்டு.இப்படி கட்சியில் யாருமே இல்லனு மட்டும் சொல்லிராதீங்க.
அது பெரியார் ,அம்பேத்கர் வழியில் வரும் விமர்சனம்
திமுகவை ஆதரித்தால் திமுகவினரையே விமர்சிக்க கூடாது என்பது நம் நிலைப்பாடல்ல.
திமுகவினரில் பலரை பல ஆண்டாக தொடர்ந்து வாசிக்கிறேன்.
அவர்கள் யாரும் திமுகவை கொண்டாட ,
நிரூபிக்க அம்பேத்கரையோ, உடன் பயணிக்கும் அம்பேத்கரிஸ்டுகளையோ , வசைபாடவோ விமர்சிக்கவோ இல்லை .
அவர்களுடன் நட்பில் எப்போதும் நமக்கு ப்ரச்சனையே வருவது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக