செவ்வாய், 13 ஏப்ரல், 2021

திராவிட கம்யூனிச கருத்துக்களால் ஓரளவு நீர்த்துப்போயிருந்த ஜாதி வியாதியை தூண்டிவிட்ட அதிமுக ஆட்சிகள்

Devi Somasundaram
:1900 களின்  மத்தியில் தோன்றிய திராவிட கருத்தியல்  தந்த அழுத்தம்  காரணமா  தமிழகத்தில் ஓரளவு ( ஓரளவு தான்) நீர்த்து  போய்  இருந்த  சாதிவெறி மனோபாவத்தை,
1977  களில் மீண்டும் தூண்டி விட்டவர்  எம் ஜீ  ஆர்!.
மாவட்டங்களுக்கு தலைவர்கள் பேரை வைப்பதாய்  ஆரம்பித்தது,
அவர் தான்...நேரடியா கட்டபொம்மன், முத்துராமலிங்கம்னு  வைத்தால்  கேள்வி வரும் என்பதால் ஈரோட்டுக்கு  பெரியார்  மாவட்டம் என்று  ஆரம்பித்து,
நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார்.
நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து,“நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்”என்று அழைக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். சிவகங்கை மாவட்டத்தை பசும்பொன் தேவன் திருமகனார் மாவட்டம் என்று அறிவித்தார். திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது.
போக்குவரத்து கழகங்களின்  பேரிலும்  தலைவர்கள் பெயரை கொண்டு வந்தார்.  இப்படி மறைய தொடங்கி  இருந்த  சாதி நெருப்பில் சுள்ளியை  தூக்கிப் போட்டார்  எம்  ஜீ  ஆர்.
91-96 ல் அதில் எண்ணை ஊற்றினார் அம்மையார் ஜெயலலிதா.
1996 வரை  தமிழகம்  பற்றி  எரிந்தது..
97  ல் கலைஞர்  ஆட்சிக்கு  வந்த போது விருதுநகர்  போக்கு வரத்து கழகத்திற்கு  வீரன்  சுந்தரலிங்கம் போக்குவரத்து  கழகம் என்று  பெயர் வைத்தார்.
பட்டியலின  சாதி பேர் வைத்த  பஸ் தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று ஒரு  சாதியினர்  கலவரம்  செய்ய,  பெயர் மாற்றும்  கோரிக்கை  எழுந்தது..
சுந்தரலிங்கம்  பேரை  எடுத்தால் கலவரம் வெடிக்கும்  என்று கிருஷ்ணசாமி ஒரு பக்கம்  புகைய . கலவரம்  பற்றி எரிய,
எல்லா போக்குவரத்து கழக,மாவட்ட  பேர்களில் இருந்து பெயர்களை நீக்கி கலைஞர்  உத்தரவிட்டார் .பெரியார், காமராசர்,அண்ணா பெயர்களையும் நீக்கும் இந்த  உத்தரவில் கண்ணீரோடு  தான்  கையெழுத்து  இடுகிறேன் என்று  கலைஞர் வேதனையுடன்  தெரிவித்தார். .
திராவிடமும், கம்யுனிஸமும்  வென்னீர்  ஊற்றி  அழித்து வைத்து  இருந்த சாதி விஷச் செடிக்கு முதலுரம்  இட்டவர்  எம்  ஜீ  ஆர் , எம்  ஜீ ஆர் வழியில் அதை  தொடர்ந்தவர்  ஜெயலலிதா
#தேவி.

கருத்துகள் இல்லை: