புதன், 14 ஏப்ரல், 2021

கோவை வாக்குப்பெட்டி வளாகத்திற்குள் சில காண்டெயினர்கள் வந்துள்ளது

கோவையில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள், சில கண்டெய்னர் லாரிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளதாக இப்போது வந்த நம்பகமான செய்தி..! கண்டெய்னர்களைக் கண்டால் எச்சரிக்கையடையுங்கள் என்று இரு நாட்களாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி வளாகத்துக்கே வந்திருக்கின்றனவாம்..

2 கண்டெய்னர் லாரிகள் புகுந்ததால் பரபரப்பு

.தினத்தந்தி :கோவை வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி. கல்லூரிக்குள் 2 கண்டெய்னர்  லாரிகள்  புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு (ஜி.சி.டி.) கொண்டு வரப்பட்டன.
அங்கு பிரத்யேக காப்பு அறைகளில் (ஸ்டாரங் ரூம்) மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி. கல்லூரிக்குள் புகுந்தன. அதை அங்கிருந்த முகவர்கள் கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர்.
இரவு நேரத்தில் 2 கண்டெய்னர் லாரிகள் உள்ளே புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த முகவர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.


வாக்குவாதம்
உடனே நா.கார்த்திக் மயூரா ஜெயக்குமார், குறிச்சி பிரபாகரன், சண்முக சுந்தரம், கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜி.சி.டி. கல்லூரிக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், கண்டெய்னர் லாரிகளை சோதனையிட்ட னர். இதில், அது கண்டெய்னர் லாரி அல்ல மகளிர் போலீசார் பயன் படுத்தும் நடமாடும் கழிவறை வாகனம் என்பது தெரியவந்தது.
அப்போது, தி.மு.க. வேட்பாளர்கள், இரவு நேரத்தில் ஏன் நடமாடும் டாய்லெட் வாகனங்களை கொண்டு வரவேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.
 இதைத்தொடர்ந்து அந்த 2 வாகனங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்துக்கு இரவு நேரத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

nakkheeran.in/author/ramkumar">ப.ராம்குமார் :

 Power outage at the counting center ... Surveillance camera betrayed !!

 தென்காசி மாவட்டத்தின், தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு முடிக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் தென்காசி அருகிலுள்ள யு.எஸ்.பி.பாலிடெக்னிக் கல்லூரியில் 5 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு பிற கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தமுள்ள 8 கண்காணிப்பு கேமராக்களும் இணைக்கப்பட்டுத் தனியான கண்காணிப்பு அறையில் மானிட்டர் செய்யப்படுகின்றன. அந்த அறையில் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் கட்சிகளின் வேட்பாளர்கள் என அனைவரும் அமர்ந்து கண்காணிக்கின்றனர். அந்த அறையில் ஒவ்வொரு தொகுதிக்கான சி.சி.டி.வி. காட்சிகள் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு டி.வி.யிலும் ஒளிபரப்பாகிறது. 

  இந்த நிலையில், நேற்று (13.04.2021) நள்ளிரவு கண்காணிப்பு அறையிலுள்ள டி.வி.யில். ஸ்டாராங் ரூமில் கரண்ட் கட் ஆனது தெரிய வந்துள்ளது. ஆனால் கண்காணிப்பு அறையில் மின் தடையில்லை. இந்த தகவல் திமுகவின் மா.செ. சிவபத்மநாபனுக்குத் தெரியவர, அவர் மற்றும் மதிமுகவினர், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், சங்கரன்கோவில் வேட்பாளர் ராஜா ஆகியோர் கட்சியினருடன் சென்று மாவட்டக் கலெக்டரான சமீரனிடம் புகார் கொடுத்துள்ளனர்.

 

Power outage at the counting center ... Surveillance camera betrayed !!

 

மின்தடை ஏற்படுவது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்கிறார் மா.செ. சிவபத்மநாபன். ஆனால் கலெக்டரான சமீரனோ, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்ட கேமராக்கள் பிரச்சினையின்றி இயங்குகின்றன. ஆலங்குளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மட்டுமே சில நிமிடங்கள் கேமரா இயங்கவில்லை என்றிருக்கிறார்.

 அதனை முகவர்கள் முன்னிலையில் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றிருக்கிறார் மா.செ. சிவபத்பநாபன். இந்த சம்பவம் பரபரப்பான பேச்சாகியிருக்கிறது.</

கருத்துகள் இல்லை: