வியாழன், 15 ஏப்ரல், 2021

அம்பேத்கர் வழி நின்று சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் !

“அம்பேத்கர் வழி நின்று சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் !
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் - இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.
May be an image of one or more people and people standing

Shahjahan R  : பம்பாய் சட்டமன்றத்தில் 4-8-1923 அன்று எஸ்.கே. போலே ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி ஆறு, குளம், கிணறு  நீர்த்தேக்கம் முதலிய தண்ணீர் கிடைக்கக்கூடிய பொது இடங்களிலும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற பொது இடங்களிலும் தீண்டப்படாதோர் நுழை தடையும் கூடாது என்று முடிவு  செய்யப்பட்டது. எல்லாத் துறைகளும் இந்தத் தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பம்பாய் அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், உண்மையில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொது இடத்துத் தண்ணீர் குடிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று என்பதையும், அதற்குப் பின்பலமாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டது என்பதையும் நிரூபிக்க அம்பேத்கர், மஹாட் என்ற ஊரில் செளதார் என்ற பொதுக்குளத்தின் நீரைப் பருகித் தனது மனித உரிமையை நிலைநாட்டிக் கொள்ள நிச்சயித்தார். அப்போதுதான் மற்றவர்களுக்கு இந்த உரிமை சரியாகப் புரியவரும் என்று அவர் கருதினார்.


மஹாட் என்ற ஊரின் நகரசபை 1924ல் அந்த ஊரில் இருந்த குளத்தின் நீரை தீண்டப்படாதோர் உள்பட அனைத்து மக்களும் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
மஹாட் நகரில் தீண்டத்தகாதோர் மாநாட்டை 19-3-1927 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. சுமார் 5000 பேர் இதில் பங்கேற்றனர். தீண்டப்படாதவர்களும் சௌதார் குளத்திலிருந்து நீர் நிரப்பிக் கொள்ளலாம் என்று மஹாட் நகரசபை எடுத்த முடிவை அமல்படுத்த வேண்டும் என்று இந்த மகாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கேற்ப அம்பேத்கர் புறப்பட்டதும் அவரைத் தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று சௌதார் குளக்கரையை அடைந்தனர். அக்குளத்தின் நீரைப் பருகித் தங்கள் உரிமையை நிலைநாட்டினர். பிறகு அனைவரும் மகாநாட்டு அரங்கிற்குத் திரும்பினர்.
ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் உள்ளூர் கோவிலுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளனர், இந்துமதத்திற்கு பேராபத்து வந்துவிட்டது என்று பிரச்சாரம் செய்தனர். மகாநாட்டுப் நிரதிநிதிகள் என்று யாரெல்லாம் தென்பட்டனரோ அவர்களையெல்லாம் அடித்துநொறுக்க ஆரம்பித்தனர்.
இதையெல்லாம் பார்த்தபோது அம்பேத்கருக்கு கோபம் பொங்கிவந்தது. ஆனால் இங்கு அம்பேத்கர் விவேகத்தைக் கையாண்டார். நாம் திருப்பித் தாக்கக்கூடாது. அகிம்சையை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அதன்படியே தலித்துகள் அமைதியாக எல்லா இன்னல்களையும் தாங்கினர்.
இதற்கிடையில் பிராமண சமூகத்தினர் பெருமாள் கோவிலில் கூட்டம் நடத்தி, சௌதார் குளத்தை சுத்திகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அக்குளத்திலிருந்து 108 குடம் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் சாணம், பசுவின் சிறுநீர் பெற்றுக் கலந்து கெட்டிப் படுத்தி, பாலும் தயிரும் கலந்து பானைகளில் வைக்கப்பட்டது. பிறகு தண்ணீர்க் குடங்களில் அக்கலவையை ஊற்றி அனைத்தையும் மீண்டும் குளத்தில் கொட்டி “சுத்திகரிப்பு” செய்தனர்.
மஹாட் நகரசபை 4-8-1927ல் புதியதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி சௌதார் குளம் பொதுவானது என்று முன்பு எடுத்த முடிவை நகரசபை திரும்பப்பெற்று ரத்து செய்தது.
---------
சனாதனிகளால் குடிப்பதற்கு தண்ணீர் மறுக்கப்பட்ட அம்பேத்கர்தான் ராஜகோபாலாச்சாரியாரின் தோள்மீது கைபோட்டு நின்றிருக்கிறார்.
கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.

கருத்துகள் இல்லை: