Kathiravan Mayavan : என் இந்த தொடர் கள்ளமௌனம் ? எங்கே ஜனநாயக சக்திகள்?
சாதிய படுகொலையை கண்டிக்க யாரும் முன்வரவில்லையே என்?
எங்கே சிபிஎம் பாலகிருஷ்ணன் ?
எங்கே அறிவுஜீவிகள்?
எங்கே தீண்டாமை ஒழிப்பு முன்னணி?
எங்கே தமுஏச ?
எங்கே சமூக அக்கறையாளர்கள் ?
எங்கே பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள்?
எங்கே ஊடங்கள்?
உளுந்தூர்பேட்டை, தேவியானந்தல் கிராமம்
வன்னியர் வகுப்பை சேர்ந்த
வீரமணி என்பவரது மகள் சரஸ்வதியை அதே பகுதியைச் சேர்ந்த தலித் வகுப்பை சேர்ந்த
ரங்கசாமி, அவரது நண்பர்கள் இருவர் திருமணத்திற்குச் சம்மதிக்காததால் கொடூராமாகக் கொலை செய்துள்ளனர்.
குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்துள்ளனர்
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
Sukirtha Rani : தோழர், இது மிகக் கொடூரமான செயல்தான்..இதை யாரும் நியாயப்படுத்தப் போவதில்லை.. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் ,கொலைகள் எல்லாம் கண்டிக்கத்தக்கன..
அதில் மாற்றுக் கருத்து இல்லை..இதில் சாதிபார்த்துச் செய்வதில்லை..
ஆனால் இப்படி ஒன்று நிகழ்ந்தவுடன், முற்போக்காளர்களைப் பார்த்து நீங்கள் இதைக் கேட்டீர்களா? இதைச் செய்தீர்களா? எங்குப்போனீர்கள் என்று கேட்பது சரிதானா?
கொலையை மனச்சாட்சி உள்ள, மனிதர்களாக உள்ள எல்லோரும்தான் கண்டிக்க வேண்டும்.அதைக் குறித்துப் பேச வேண்டும்..
ஆனால் குறிப்பிட்ட சிலரை மட்டும் நீங்கள் வினா எழுப்புவது சரிதானா?
இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப் பட்டுள்ளனர் என்று பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..
மகிழ்ச்சி..ஆனால் பட்டியலின, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் இவ்வாறாக வல்லுறவு செய்யப்படும்போது அல்லது கொல்லப்படும்போது ,எப் ஐ ஆர் போடுவதற்கும், குற்றவாளிகளைக் கைது செய்யவும், நீண்ட நெடிய தொடர் போராட்டங்களை முற்போக்கு அமைப்புகளும், இயக்கங்களும் , கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் நடத்திய பிறகுதான் குற்றவாளிகளைக் கைது செய்யும் சம்பவங்கள் ஓரளவு நிகழ்கின்றன.
அரசும் காவல் துறையும் எங்கு எப்போது யாருக்காக விரைந்து செயல்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா?
பட்டியலினம் என்னும்போதுமாட்டும் ஏன் காவல்துறையும் அரசும் மெத்தனமாக நடந்து கொள்கிறது? சூத்திர சாதிக் கொலை என்னும்போது மட்டும் அரசும் காவல்துறையும் நீதி நிலைநாட்ட ஓடோடுகிறது.. எந்த சமூகத்தில் இம்மாதிரிக் கொடூரம் நிகழும்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு..
ஆனால் அதற்கான சூழல் இருதரப்புக்கும் சமமாக இருக்கிறதா என்பதே கேள்வி.எனவே எங்கு யாருக்கு நீதி மறுக்கப் படுகிறதோ அல்லது எங்கு யாருக்கு அதற்கான முயற்சியில் பாதகம் ஏற்படுத்தப்படுகிறதோ அங்கு, அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதானே சரியானதாக இருக்கும்?
நீங்கள் மேற்குறிப்பிட்டிருக்கும் வழக்கைப்போல பட்டியலின வழக்குகளில் உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறார்களா?
யாருக்காக எங்கு போராட வேண்டும் என்பதை முடிவு செய்வது முற்போக்காளர்கள் அல்லர்.. அரசு அதிகாரம்தான் தோழர்.
Sukirtha Rani : முதலில் சாதியப் படுகொலை என்றால் என்ன என்று ஒரு தெளிவுக்கு வாருங்கள் தோழர்.பிறகு நிறைய உரையாடலாம்..
Vaithiyanathan Cuddalore : Sukirtha Rani
நண்பர்கள் இருவர் குடிக்க போன இடத்தில் தகறாரு! அதில் ஒருவர் இறக்கிறார். நண்பர்களுக்குள் நடக்கும் கொலை களை தான் சாதி ஆணவ படுகொலைகள். இது போல் உன் சாதி ஆட்களை திருமணம் செய்ய முடியாது என்று விலகி சென்றவரை கொலை செய்வது சாதி ஆணவ படுகொலையில் வராது!
Shunmuga Sundram : கொலை தீர்வல்ல.
வன்முறை இழப்பு நோக்கி மட்டுமே பயணிக்கும்.… ஆண், பெண் இருபாலாரும் சினிமாவைப் பார்த்து கற்பனை வாழ்க்கையில் பயணிக்கும் உளவியல் அடிப்படையில் சமூகப் பிரச்னைகளின் தொடக்கம். இங்கு காதல் என்பது தொடர்ந்து தவறிழைக்கும் மனப்பான்மையை நோக்கியே நகருகிறது.
அடிப்படையில் ஆணாதிக்க சமூக வெளிப்பாடு தான் இந்த குற்றத்தின் அடிப்படை. தான் விரும்பிய பெண் கிடைக்காவிட்டால், தன்னை அந்த பெண் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த பெண்ணை தீர்த்துக் கடடுவோம் என்ற மனநிலை ஆணாதிக்கத்தின் உச்சம்.
சாதி ரீதியாக அணுகாமல் இருதரப்பினரும் ஒற்றுமையாக குற்றவாளியை தண்டனைக்கு உள்ளாக்குவதே சமூக நலன்.
அ த சண்முக சுந்தரம்
பகுத்தறிவாளர்
Sukirtha Rani : ஆனால் ஒன்று தோழர்.. நீங்கள் குறிப்பிட்ட இந்தச் சகோதரியின் சமூகத்தில் ஜனநாயக சக்திகள், அறிவுஜீவிகள், சமூக அக்கறையாளர்கள், முத்தரசன்கள், பாலகிருஷ்ணன்கள் யாருமில்லை என்பதை இந்தப் பதிவு மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி. எங்கள் போராட்டங்கள் சாதி, மதம், இனம் கடந்தது.நீங்கள் வினா எழுப்ப வேண்டியது சூத்திரசாதி நோக்கித்தான்.முதலில் அதைச் செய்யுங்கள் தோழர்.நன்றி.
Kathiravan Mayavan : Sukirtha Rani
இது தான் பிரச்னை . சூத்ரா ஜாதிவெறி மட்டும் இங்கு இல்லை சேரி ஜாதிவெறி இருக்கிறது.. இந்த கொலை ஆதாரம் .. உங்களை போன்றவர்கள் சேரி ஜாதிவெறிக்கு எதிராக அணி திரள்வது இல்லை.. ஏன் ? சொல்லுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக