இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் கொஞ்சம் அதிக அளவில் இருப்பது உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிகுந்த இந்த மாநிலம் மத்திய அரசின் செல்லப்பிள்ளை என்ற ரேஞ்சில் உள்ளது ஆர் எஸ் எஸ் இன் ஆதிக்கம் மிகுந்த இந்த மாநிலம் போலவே தமிழ்நாடும் மாறவேண்டும் என்று ஜாக்கி வாசுதேவ் போன்ற காவிகள் விரும்புகிறார்கள்
தினமலர் :சென்னை: 'உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:
உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது.
இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கோவில்கள், மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன.
இது, மிகப்பெரிய முன்னேற்றம்.கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது.
இந்த நடவடிக்கையை, மற்ற மாநில முதல்வர்களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிப்பது,
உத்தரகண்ட் போல எளிமையாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், விருப்பம் இருந்தால், எத்தகைய சிக்கலுக்கும் நம்மால் தீர்வு காண முடியும்.இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக