இப்போ சில ஃபாக்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்...
நடிகர் விவேக் அவர்களின் மாரடைப்பு மரணம் ஆழ்ந்த வருத்தத்துக்குறியது. எதிர்பாராதது. My respects to him!
நடிகர் விவேக் அவர்களின் இறப்பு தமிழ் சினிமா உலகத்திற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. தன்னுடைய நகைச்சுவையின் மூலம் மக்களின் சிந்திக்கும் திறனை தூண்டிய 'ஜனங்களின் கலைஞன்' அவர்.
அவரது இறப்புக்கு காரணம் அவர் போட்டுக்கொண்ட தடுப்பூசி அல்ல. அவரது இதய இரத்தக் குழாயில் ஏற்பட்ட 100% அடைப்பே காரணம் என்று அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்குள் ஒரு சிலர், " இல்ல, இல்ல... எங்களுக்கு தெரியும்... தடுப்பூசியின் பின்விளைவினால தான் அவர் இறந்தாரு... கோவிட் தடுப்பூசி போட்டுகிட்டா, ரத்த உறைதல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் அப்படின்னு நாங்க படிச்சோம்... இப்படி இந்தியாவில தடுப்பூசி போட்டு நிறைய பேர் இறந்து இருக்காங்க... நல்லா இருந்தவரு இப்படி தடுப்பூசி போட்டு இறந்து போயிட்டாரு" என்று கிளம்பியிருக்கிறார்கள். உங்களுக்காக சில செய்திகள்.
1. இந்தியாவில் மார்ச் 31, 2021 வரைக்கும் மொத்தம் 6,30, 54,353 டோஸ் தடுப்பூசிகள் போட்டிருக்காங்க.அதே தேதி வரைக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டதலிருந்து 28 நாளிற்குள் இறந்தவர்கள் எண்ணிக்கை 180. இவை அனைத்தும் தடுப்பூசி சம்பந்தப்பட்ட இறப்புதான் அப்படின்னு இன்னும் நிரூபிக்கப்படல. அப்படியே வச்சிக்கிட்டா கூட, இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 0.28. ( 0.28 per 1 lakh of vaccinated). ஒரு லட்சத்திற்கு ஒருத்தரை விட கம்மி. கோவிட் வைரஸ் தாக்கி இறப்பவர்கள் சதவிகிதம் இந்தியாவுல நேற்று வரைக்கும் 1.21%. அதாவது நூத்துக்கு 1.21 பேர், லட்சத்திற்கு 1210 பேர்.
2. இப்போ உலக அளவில் கோவிட் தடுப்பூசி போடுவதால் வரும் ரத்த உறைதல் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம். Oxford universityஇல் ஒரு retrospective study செய்து பார்த்திருக்கிறார்கள். 5,13,284 கோவிட் நோயாளிகளையும், 4,89,871 கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் இரண்டு வாரங்களுக்கு கண்காணிச்சு இருக்காங்க. இதில் கோவிட் நோயாளிகளில், லட்சத்திற்கு 3.9 பேருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனைகள் வருவதாகவும், கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் லட்சத்திற்கு 0.4 பேருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனைகள் வருவதாகவும் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.
கோவிட் தடுப்பூசி போட்டா, ரத்தம் உறைதல் பிரச்சனைகள் வருது அதனால மரணம் நிகழுது அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கிற நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??
1. கோவிட் அப்படிங்கறது ஒரு வியாதியே இல்லை. அது இலுமினாட்டி வேலை, ஒரு கார்பரேட் சதி. எனக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி அதிகம். இயற்கை முறைகளில் எதிர்ப்பு சக்திய அதிகரிக்க எனக்கு தெரியும் அப்படின்னு சொல்லிக்கிட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்காம, மாஸ்க் போடாம, personal hygieneஅ பற்றி எந்த கவலையும் இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்கீங்க.
2. இன்னும் சில பேர், கோவிட் பற்றி தெரிஞ்சிருந்தும், "இதுல கவலைப்பட ஒன்றுமில்லை", "என்னோட வயசுக்கு கோவிட் வரப் போவதில்லை", " எனக்கு ஏற்கனவே வந்து போயிடுச்சு, இப்போ ஒன்னும் ஆகாது" அப்படின்னு தியேட்டர் போறீங்க, ஷாப்பிங் போறீங்க, கல்யாணம் காதுகுத்து எல்லாத்துக்கும் போயிட்டு இருக்கீங்க.
ஐயா, உங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான் சொல்லிக்கணும். தடுப்பூசி போடுவதும் போடாததும், அவங்க அவங்க இஷ்டம். Risk benefit analysis படி போட்டுக்கிட்டா நல்லது. போடப் போறதில்லனு முடிவு பண்றீங்களா, அப்போ கோவிட் வராம தடுக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் தீவிரமா கடைபிடிக்க வேண்டும், ஒரு விரதம் போல. ஏன் சொல்றேன்னா, தடுப்பூசி போடாமல் இருந்து கோவிட் வர வைத்துக்கொண்டாலும் உங்களுக்கு அதே ரத்தம் உறைதல் பிரச்சனைகள் தான் வரப்போகுது. அது எப்படிங்க விரதம் மாதிரி இருக்க முடியும்னு கேக்குறீங்களா? அப்போ தடுப்பூசி போட்டுக் கொள்வது என்னும் சின்ன ரிஸ்க் எடுக்குறது தப்பில்லை.
நண்பர்
Kaviarasan Thirugnanam
சொன்ன மாதிரி, " ஆதி மனிதன் சக்கரத்த கண்டுபிடிச்சப்போ,'ஐயோ இது வேகமாக போகுது இதனால நமக்கு ஆபத்து', அப்டின்னு சொன்னவனும் இருந்திருப்பான்". ஆக முடிவு நீங்க தான் எடுக்கனும். டார்வின் சொன்னதே தான்-"தக்கன தப்பிப் பிழைக்கும்".1.https://www.google.com/.../blood-clot-risk-from-covid.../amp
2.https://ourworldindata.org/mortality-risk-covid...
-மரு. கதிரவன்
17/4/21
P.S: via Dr.
Kathiravan Rajamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக