அந்த அளவுக்கு இருவரின் கூட்டணியும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தனர். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவரது எதார்த்தமான நடிப்புக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளும் இருக்கின்றனர்.... கார்த்திக் சினிமாவில் மார்க்கெட் குறைந்த பிறகு அரசியலில் ஈடுபட்டார். ஏன் இடையில் சொந்தமாக ஒரு கட்சி கூட தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொஞ்சம் உடல்நிலை சரியான பிறகு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பிரபல கட்சி ஒன்றுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மருத்துவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கார்த்திக் இந்த முடிவு எடுத்தது தற்போது அவருக்கு வினையாக முடிந்துள்ளது.
பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மூச்சுதிணறல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... ஒருவேளை கொரானாவாக இருக்குமோ என சோதனை செய்து பார்த்ததில் கார்த்திக்கு கொரானா இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் மூச்சுத்திணறல் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம்.
இதனால் கார்த்தியின் குடும்பத்தினர் உச்சகட்ட பதட்டத்தில் உள்ளனர். விரைவில் சிகிச்சை பெற்று நல்ல முறையாக வீடு திரும்புவார் என நம்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக