tamil.samayam.com :தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டத் தேர்தல்கள் முடிவுற்றுள்ளன. ஐந்தாம் கட்டத் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் அனல்பறந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தின் தப்கிராம் - ஃபுல்பரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நடந்து முடிந்த 135 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 100 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
நான் சொல்கிறேன். தேர்தல் முழுவதுமாக நடந்து முடிந்த பிறகு 294 தொகுதிகளில் 70 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது.
ஒரே விஷயத்தை வெவ்வேறு இடங்களில் பாஜக மாற்றி மாற்றி கூறி வருகிறது.
டார்ஜிலிங்கில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது NRC அமல்படுத்தப்படாது என்றார்.
ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் விதிமுறைகளின் படி சட்டவிரோத அகதிகளை அடையாளம் காணும் நடவடிக்கையாக ஏற்கனவே 14 லட்சம் பேர் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 14 லட்சம் பேர் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாஜக சொல்வதை எதையும் செய்யாது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்க மாநிலத்தில் NRC-ஐ அனுமதிக்க மாட்டோம்.
நீங்கள் அனைவரும் நமது மாநிலத்தின் குடிமக்கள். எனது ஒரே வேண்டுகோள் இதுதான்.
அனைவரும் கட்டாயம் TMC-க்கு வாக்களிக்க வேண்டும். எப்போது மக்களுக்கு எதிரான கட்சி பாஜக. தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஏற்றத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை தான் பெரிதும் பாதிக்கும் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக