Sivakumar Shivas : இந்தியா வழங்கும் வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizens of India) திட்டத்தில் பல மாற்றங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா வழங்கும் வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizens of India) திட்டத்தில் பல மாற்றங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது.
OCI அட்டை வைத்திருப்பவர்கள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் இந்தியா வந்து எவ்வளவு காலமும் தங்கலாம் என்பதற்கான பல நுழைவு (multiple entry) வாழ்நாள் விசாவைப் பெறலாம்.
ஆனால் ஆராய்ச்சி, மதம் பரப்புதல், Tabligh போன்ற இஸ்லாமியப் பயணம், மலையேறுதல், ஊடகப்பணி உள்ளிட்ட சில பணிகளுக்கு OCI அட்டை வைத்திருக்கும் ஒருவர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர் (FRRO) அல்லது இந்திய தூதரகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் OCI அட்டைதாரர்களுக்கு சில சலுகைகளையும் இந்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானக் கட்டணங்கள், தேசிய பூங்காக்கள், தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைப் பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணம் போன்ற அம்சங்களில் இந்திய குடிமக்கள் போன்று OCI அட்டை வைத்திருப்போரை சமமாக நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
OCI அட்டைதாரர்கள் இந்தியாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றவும் அல்லது வெளிநாட்டு அரசாங்க அமைப்புகளில் பயிற்சியில் (internship) ஈடுபடவும் அல்லது இந்தியாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு தூதரகப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறவும் சிறப்பு அனுமதி தேவை என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அல்லது அதன் அமைப்பு அறிவிக்கும் பாதுகாக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் வரும் எந்த இடத்தையும் OCI அட்டைதாரர்கள் பார்வையிட சிறப்பு அனுமதி தேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக