உலகிலேயே மிகப்பெரிய ஜனநாய நாட்டின் பிரதமரை ஸ்பான்சர் செய்து 130 கோடி மக்களை தனது வலிமையான சாம்ராஜ்யத்தின் அடிமைகளாக மாற்றி இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான விலைவாசி உயர்வும் பணவீக்கத்துக்கும் காரணமாகியிருக்கிறது இவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்சியின் ஆட்சியால். ஒரு நாடு முழுவதும் வியர்வை சிந்தி கொண்டிருக்கிறது ஒரு சிலர் வசதியாக வாழ்வதற்கு.
இந்திய தொழில் உற்பத்தித் துறைக்கு கடுமையான கச்சாப்பொருள் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி கடுமையான விலைவாசி உயர்வுக்கு ஆட்சியாளர்களே காரணமாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதி செய்ய தடையில்லை ஆனால் நிறுவனங்கள் உலகில் எந்த மூலையில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. மேக் இன் இண்டியா திட்டம் என்பது இந்திய நுகர்வோரை வஞ்சிக்கும் ஒரு கொடுமையான திட்டம்.
இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் இதர கச்சாப் பொருட்களின் விலைவாசி உயர்வு மட்டுமே அதானி அம்பானியின் மணிக்கு 60 முதல் 70 கோடி வருமானம் பெற காரணமாகி இருக்கிறது.
மொத்த நாடும் பட்டினி கிடக்கு உலக அரங்கில் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் நெஞ்சுக்கு குறுக்கே கைகள் இரண்டையும் வைத்து கோட் சூட் போட்டுக் கொண்டு ஸ்டைலாக சிரித்துக் கொண்டு போஸ் கொடுப்பதற்கு.
அதானி ஒரு பாஜகவின் முகமூடி அவ்வளவு தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக