Thameem Tantra : /வேறு யாரையும் ஜாதி பெயர் சொல்லி குறிப்பிடாதவர்கள் எல்லாம் ஏன் கமல்ஹாசன் என்றால் மட்டும் ஐயங்கார் என்று சொல்கிறார்கள்?
சில பெண்களை மட்டுமே மாமி என்கிறார்கள்?//
இதற்கு பெரிய சயின்ஸ் புக் எல்லாம் படிக்க தேவையே இல்லை நம்மளை சுற்றி என்ன நடக்கிறது என்ற புரிதல் இருந்தாலே போதும்.
அர்ஜுன் சம்பத் ஒரு தீவிர இந்துத்துவவாதி, இந்துத்துவம் அவர் சார்ந்த சாதியை இழிவுபடுத்துகிறது என்று அவருக்கு தெரிந்தாலும் கூட தான் கொண்ட கொள்கைக்கும், ப்ராஹ்மணர்களுக்காகவும் மூச்சு முட்ட வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இப்போது கமல் ஹாசனை எடுத்துக்கொள்வோம்..
அவர் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார், பெரியாரை வேணும்போது பெப்பர்போல் அவர்மேல் தூவிக்கொள்கிறார், மாட்டுக்கறி சாப்பிடுகிறார். தன் படங்களில் ப்ராஹ்மணர்களை so called கிண்டல் செய்கிறார் ( அதிலும் ப்ராஹ்மணர்களில் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை மட்டும் அவர் டார்கெட் செய்கிறார்).
சரி இப்போ நா ஒரு scenario சொல்றேன்..
இப்போது மைலாப்பூரில் அர்ஜுன் சம்பத்தும் கமல் ஹாசனும் போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள் ?
பெரியார் பெப்பர் போட்டு மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு கடவுளை கிண்டல் செய்யும் கமல் ஹாசனா ?
அல்லது.. மாட்டை தெய்வமாக வணங்கி ப்ராஹ்மணர்களை உயர்வாக பேசி தன் வாழ்நாளையே ஹிந்து மத மேம்பாட்டிற்காக உழைக்கும் அர்ஜுன் சம்பத்தா ?
பதில் மிகவும் எளிது ! கமல் ஹாசனே அமோக வெற்றிபெறுவார். அது எப்படிப்பா ?
ப்ராஹ்மணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கமல் ஹாசன் ஜெயிக்க முடியும் ?
இதுக்கு பெரியார் அம்பேத்கர படிக்கணும். படிக்கணும்னா டக்கு டக்குனு பத்து புக்க படிச்சுட்டு படிச்சுட்டேன்னு சொல்றதுக்கு இது எதோ எக்ஸாம் இல்ல..
அதை உள்வாங்கி மக்கள் சமூகம் என்று ஒப்பிட்டு பார்த்து அதை அவ்வாறே மனிதநேயத்துடன் புரிந்துகொள்வது.
இங்கு ஜாதி என்பது எதோ ஒருவர் தான் ஜாதியை துறந்துவிட்டேன் என்பதால் ஜாதி போய்விடாது.
அம்பேத்கார் தெளிவாக சொல்கிறார் - 'Caste is a notion'
அதாவது ஜாதியென்பது தீண்டாமையோ, சுவரோ பூணுலோ அல்ல .. அது ஒரு மனநிலை.
புரியுரமாரி சொல்லனும்னா.. இப்போ ஒரு ப்ராஹ்மணர், ஒரு நாயுடு, ஒரு செட்டியார் மற்றும் ஒரு பட்டியல் இனத்தவர் இருக்கிறார். அனைவரும் so called இந்துக்கள் .
ஜாதிய கொடுமை தாங்காமல் உடனே அந்த பட்டியல் இனத்தவர் சொல்கிறார்.. "போதும் பா இந்த மதம்... இனி இந்த ஜாதி இழிவுகள் வேணாம்.. இன்று முதல் நான் நாத்திகன் .. எனக்கு இனி கடவுள் கிடையாது" என்று சொல்கிறார்.
அதாவது அந்த நான்குபேரில் ஒருவர் நாத்திகனாகிவிட்டார். இப்போ இவருடைய ஜாதி போய்விடுமா ?
போகாது. ஏன் என்றால் ஜாதி ஜாதிய ஏற்ற தாழ்வு என்பது ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது.
இவர் தான் ஒரு இந்துவல்ல தான் ஒரு நாத்திகன் தனக்கு இனி ஜாதி கிடையாது என்று தம்பட்டம் அடித்து கொள்ளலலாம்.. ஆனால் அங்கு இருக்கும் அந்த ப்ராஹ்மணர், நாய்டு, செட்டியார் மூவரும் இவரை ஒரு தலித்தாகவே பார்த்தால் இவரின் ஜாதி அப்படியே இருக்கும், ஏற்ற தாழ்வுகளும் அப்படியே இருக்கும்.
இதுதான் பாயிண்ட். இதனால் தான் இந்துமதத்தை சீரமைக்க முடியாது என்று அம்பேத்கர் மதமே மாறினார்.
Excluding yourselves from unjust society is not enough, including yourselves by creating/including into another society is must.
சும்மா போறபோக்கில் reverse racism என்று சொல்வதெல்லாம் apathetic behavior.
ராகுல் காந்தி, மம்தாவிற்கு செய்யாத so called reverse racism கமலுக்கு மட்டும் திராவிடம் குறிவெச்சு செய்கிறதா ? இதெல்லாம் அப்பட்டமான அவதூறு/அஜெண்டா.
அப்பறோம் இன்னொரு விஷயம்..
Science is a tool , its not a dogma.
நாமும் பெரும்பாலான புத்தங்கங்களை படித்து இருக்கிறோம். படித்த அறிவு சமூகத்தையும் அதனுடைய துயரத்தையும் புரிந்துகொள்ள பயன்படுத்த வேண்டுமே தவிர..
ஒரு போதும் அதை வைத்து reductionism செய்யக்கூடாது, அதுதான் apathetic behavior.
இளையராஜா பியானோ வாசிக்கும் போது ஒரு தேர்ந்த mathematicianனால் அதை முழுவதுமாக அக்குவேறாக ஆணிவேராக ஒரு பேப்பரில் எழுதிவிட முடியும், ஒரு physicistடால் விளக்கிவிடமுடியும் ..
ஆனால் இசை என்பது அதுவல்ல.
எதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பதே பகுத்தறிவு.
நாம் இருக்கும் comfort zoneல் தான் உலகம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் அதற்கு பொறுப்பு கண்ணைமூடிக்கொண்ட பூனையே.
வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் அறிவைவிட, அதை பயன்படுத்தும் பகுத்தறிவே முக்கியமானது.
- தமீம் தந்த்ரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக