இந்த மொழி யில் கரைந்து போய்விட்டது
இவர்களின் சொந்த மொழி பாடல்கள் திரைப்படங்கள் வரலாறு இலக்கியம் போன்றவை எல்லாம் காணாமலே போய்விட்டது
ராஜஸ்தான் மொழி ( மார்வாடி) சுமார் ஐந்து கோடி மக்களின் தாய்மொழி என்று கருதப்படுகிறது.
ராஜஸ்தான் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்திலும் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் உள்ளனர்.
ராஜஸ்தானி மொழியானது பல வழக்கு மொழிகளின் கலப்பு மொழி போல உள்ளது
அழிவின் விழிம்பில் உள்ள இந்த மொழியை மீட்டெடுக்கும் முயற்சி தற்போது ஓரளவு நடைபெறுகிறது.
கவலைக்கு உரியவிடயமாக இளந்தலை முறையினருக்கு இந்த மொழி தெரியவில்லை
இந்த காணொளியில் ( பின்னூட்டத்தில்) இவர்கள் இதை பேச முயலும் காட்சிகள் பார்ப்போரை கவலைக்கு உள்ளாக்கும்.
ராஜஸ்தானின் வட்டார வழக்கு மொழிகள் பற்றிய ஒரு குறிப்புக்கள் பின்வருமாறு :
மால்வி மொழி ஒரு கோடி மக்கள் பேசும் மொழி மத்திய பிரதேசத்தில் உள்ள மால்வா பிரதேசத்தில் உள்ளனர்
ஐந்து கோடி மக்கள் பேசிய ராஜஸ்தான் மொழி காணாமல் போய்விட்டது
துந்துரி மொழி எண்பது இலட்சம் மக்கள் பேசுகிறார்கள் ராஜஸ்தானில் உள்ள துந்தார் பிரதேசத்தில் இது பேசப்பட்டது
ஹாரோலி மொழி 40 இலட்ச்சம் மக்கள் தாய் மொழியாக கொண்டுள்ளனர்.ராஜஸ்தானில் ஹாடோதி பிரதேசத்தில் உள்ளனர்
மேவாரி மொழி 50 இலட்சம் மக்களின் தாய்மொழி ராஜஸ்தானில் மேவார் பிரதேசத்தில் உள்ளனர். .
அகினாவாதி மொழி 30 இலட்சம் மக்களின் தாய்மொழி .ஹரியானா ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அஹினாவாதி பிரதேசத்தில் உள்ளனர்.
சேகனாவதி மொழி 30 இலட்சம் மக்களின் தாய்மொழி.ராஜஸ்தானில் உள்ள செகாவதி பிரதேசத்தில் உள்ளனர்.
வாக்வாதி சுமார் 22 இலட்ச்சம் மக்களின் தாய்மொழி . துங்கப்பூர் பன்ஸ்வார்ஸ் பகுதிகளில் உள்ளனர் .
பாக்ரி மொழி சுமார் 14 இலட்ச்சம் மக்களின் தாய்மொழி .வடக்கு ராஜஸ்தானிலும் வடமேற்கு ஹரியானவிலும் உள்ளனர் .
நிமாதி மொழி சுமார் 22 இலட்ச்சம் மக்களின் தாய்மொழி மத்திய பிரதேசம் ராஜஸ்தான் பகுதிகளில் உள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக