dinakaran:
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
1.58 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.13 கோடியை தாண்டியது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால்
புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம்
குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 26,291 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,85,339 ஆக உயர்ந்தது.
* புதிதாக 118 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,725 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,455 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,07,352 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,19,262 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 96.68% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.39% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.93% ஆக குறைந்துள்ளது.
*இதுவரை இந்தியாவில் 2,99,08,038 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக