வெள்ளி, 19 மார்ச், 2021

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சந்திரசேகரன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை..

  Velmurugan P - tamil.oneindia.com :  சென்னை: சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக வந்த புகாரையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டை அந்த பேராசிரியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தனக்கு எதிராக சதி நடப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் மாணவிகள் தரப்பிலோ நடந்த சம்பவங்கள் உண்மை என்று கூறியுள்ளனர்.
சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், உதவிப் பேராசிரியராக மருத்துவர் சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கல்லூரியில் தனியாக இருக்கும் மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
இது குறித்து மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி டீனிடம் புகார் அளித்துள்ளனர்.


அதன்பிறகும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியிருக்கிறார்கள்.
மாணவிகளிடம் இது தொடர்பாக சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் மீது விசாரணை நடத்த 11 நபர்கள் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரித்து அறிக்கையை சுகாதாரத்துறைக்கு அனுப்பி உள்ளார்கள்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சந்திரசேகர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவர் அண்ணாநகர் அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.  இதனிடையே மருத்துவர் சந்திரசேகரன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்
மாணவர்கள் மூலமாக எனக்கு பிடிக்காதவர்கள் என்மீது சுமத்தி என் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவருகின்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று கூறியிருக்கிறார்.



கருத்துகள் இல்லை: