புதன், 17 மார்ச், 2021

வர்த்தமானம் JNU வில் நடந்த சம்பவங்கள் பற்றிய மலையாள படம்

 

Ag Sivakumar :சென்சாரில் படத்தைப்பார்த்த ஒருவர் (சங்கி) 'இதில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும்' என்று குதித்தார். அதன்பிறகு Revising Committee சென்று சேதாரமின்றி திரும்பியுள்ளனர். JNU - Jawaharlal Nehru University சர்ச்சைகள் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் இங்கே களம். பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெறும் இடது vs வலதுசாரி மோதல்கள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் இயக்குனர் சித்தார்த்தா. கதையின் நாயகி Faiza வாக பார்வதி, பேராசியராக சித்திக், மாணவரணி தலைவராக ரோஷன் போன்றவர்கள் மட்டுமே தெரிந்த நடிகர்கள். ஹாஸ்டலில் தங்கி ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்கிறார் Faiza. அங்கே தலித் மாணவருக்கு தரப்படும் உதவித்தொகை நிறுத்தப்படுவதால் போராட்டம் செய்கிறார்கள். நெற்றியில் காவித்திலகம் பூசிக்கொண்டு இவர்களை சீண்டுகிறது ஒரு பிரிவு. இதில் Faiza எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கதை. இதன் அடித்தளம் கேரளத்தின் சுதந்திர போராட்ட வீரர் அப்துல் ரஹ்மான்.

இந்திய அரசியல், மத வரலாறு எப்படி திரிக்கப்பட்டன என்பதை பேராசிரியர் சித்திக் மூலம் விவரிக்கப்படுகிறது. படத்தின் அசுர பலம் ஷார்ப்பான வசனங்கள். பாசிச அரசு, காவி ஆட்டம் என பல்வேறு விஷயங்களை சவுக்கால் அடித்துள்ளார் இயக்குனர். க்ளைமாக்சில் பார்வதி புரட்சி பேசுவார் என எதிர்பார்த்தால் மூன்று வரி வசனங்கள் மட்டுமே. ஆனால் நெத்தியடி.
உதாரணத்திற்கு... டில்லியில் உள்ள லோக்கல் சங்கி தாதா ஒருவரை பல்கலைக்குள் அழைத்து வந்து சித்திக்கை மிரட்டுகிறது வலதுசாரி மாணவர் க்ரூப். அதற்கு சித்திக் சொல்லும் பதில் 'பிரிட்டிஷ் காலத்தில் ஷூவை நக்கிய உங்களை பார்த்து எனக்கு பயமில்லை. ஆனதை பார்த்துக்கொள்'
போராட்டம், ஹாஸ்டல், ஆராய்ச்சி என சுழலும் முதல் பாதியில் திரைக்கதை பெரிதாக நகரவில்லை. மிகக்குறைந்த பட்ஜெட் என்பதால் சினிமாவிற்கான மேக்கிங் இல்லை. ஆங்காங்கே டப்பிங் சொதப்பல்கள், அமெச்சூர்த்தனமாக நடிக்கும் துணை நடிகர்கள் போன்றவை இதன் முக்கிய பலவீனங்கள்.
ஆனால் வலுவான வசனங்களும், பார்வதி மற்றும் சித்திக்கின் நிறைவான நடிப்பும் அக்குறைகளை சமன் செய்கின்றன.
சமீபகாலமாக கேரள படங்களில் வலதுசாரி சிந்தனைகளை பொளந்து கட்டி வருகிறார்கள். இதில் காரம் மிக அதிகம் என்பதுதான் ஸ்பெஷல். தியேட்டரில் பார்த்தாக வேண்டியதில்லை. OTT அல்லது TV யில் போடும்போது கண்டாலே போதும்.

கருத்துகள் இல்லை: