வியாழன், 18 மார்ச், 2021

தமிழக தேர்தலை ஈழத்தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

45 R. Sampanthan Photos and Premium High Res Pictures - Getty Images
Rauf Hakim - Sambanthar
சந்திரஹாசன் hashtag on Twitter
சந்திரஹாசன்

செல்லபுரம் வள்ளியம்மை தமிழக தேர்தலை
இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் திமுகவை ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகதான் பார்க்கிறார்கள்.  இன்றுவரை கலைஞர்தான் ஈழப்பிரச்சனையை தமிழகத்திலும் இந்திய அளவிலும் பெரிய அளவில் பரப்புரை செய்தவர். அதன் காரணமாகவே போராளிகளுக்கு இந்திய மண்ணில் எல்லாவிதமான உதவிகளும் கிடைத்தது எனவே கலைஞரும் திராவிட முன்னேற்ற கழகமும்தான் அவர்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது . ஆனாலும் அவர்கள் தமிழக அரசியல் பற்றி தற்போது பெரிதாக அலட்டி கொள்வதில்லை.
ஆனால் இந்திய காப்பரேட்டுக்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்.
இலங்கை மலையகத்தவர்கள் பெரிதும் அந்த காலத்து எம்ஜியார் விசுவாசிகள். தற்போது பாஜகவின் இந்துத்வா கருத்துக்கள் அங்கு கொஞ்சம் பரவுவது போல தெரிகிறது.


இலங்கை தமிழர்களை பொறுத்தவரை பெரும்பாலான தலைவர்கள் திமுகவோடு நெருங்கிய தொடர்போடு உள்ளவர்கள்தான்.
குறிப்பாக சம்பந்தர் சுமந்திரன் போன்ற தமிழரசு கட்சியினருக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு அண்ணா காலத்து பாரம்பரியம். அது இப்போதும் தொடர்கிறது 

தந்தை செல்வநாயகத்தின் புதல்வர் திரு சந்திரகாசன் சென்னையிலேயே பெரிதும் தங்கி இருப்பவர் . அவர் கலைஞரின் மிக நெருங்கியா நண்பர்  கலைஞரின் இறுதி நிகழ்வின் போது குலுங்கி  அழுதார்.


திரு. டக்ளஸ் தேவானந்தா கூட திமுகவோடு நல்ல பரிச்சயம் உள்ளவர்தான். திராவிட கருத்தியல் பற்றிய புரிதல் உள்ளவர்தான்.
இவரை திராவிட கருத்துக்கு நெருங்கியவராக மக்கள் கருதி விடக்கூடாது என்பதில் சீமான் நடராஜனை விட சில பெரியார் இயக்கங்கள் முழுநேர வேலை பார்த்தன.
இவர்கள் யாரும் எந்த காலத்திலும் அதிமுகவோடு ஒரு நல்ல உறவில் இருந்ததில்லை.
 

 அதிமுகவை பொறுத்தவரை ஈழ விவகாரங்களை நடராஜனின் தலைமையிலான ஒரு ஏஜென்ஸியே கையாண்டது . அது புலிகளுக்கும் அவர்கள் சார்ந்த போலி தமிழ் தேசிய குழுக்களும் பணம் மற்றும் பிரசார உதவிகள் போன்றவற்றோடு தங்கள் ஈழக்கடமையை நிறைவேற்றினர். அதாவது திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வது . அது மட்டுமே!  
 

எனவே போருக்கு பிந்திய  ஈழத்தில் ஜனநாயக சக்திகள் அரங்கிற்கு வந்த காலக்கட்டத்தில் அதிமுகவின் தொடர்பு என்பது காணாமலே போய்விட்டது.
அந்த இடத்தை சீமான் நெடுமாறன் போன்றவர்கள் பிடித்து கொண்டார்கள்.
இந்த நடராஜன் சீமான் ஏஜென்சியால் மேய்க்கப்படும் இளைஞர்கள் பெரிதும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளார்கள்  இவர்கள் பெரிதும் சீமான் முதல்வராக வருவார் என்ற கனவில் மிதப்பவர்கள் 

இலங்கை மலையக தலைவர்களும் இஸ்லாமிய தலைவர்களும்  பாரம்பரியமாக தமிழக அரசியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டவர்கள்தான் .நீண்ட காலமாகாவே திமுகவோடு அதிக தொடர்புகளை கொண்டிருப்பவர்கள். 

ஏனெனில் அதிமுக ஒருபோதும் இலங்கை தமிழ் தலைவர்களோடு நெருங்கிய தொடர்புகளை பெரிதாக கொண்டிருக்கவில்லை  
வெறும் புலிகளோடு உள்ள தொடர்பும் அதற்கு பின்பு நடராஜன் தொடர்பும் மட்டுமேதான் அதிமுகவின் ஈழக்கொள்கையாக இருந்தது. 

இன்றும் அப்படித்தான் இருக்கிறது  அதனாலதான் நடராஜனின் வளர்ப்பு பிள்ளையான சீமானுக்கு பணம் கொடுத்து ஈழ விவகாரத்தை அவருக்கு சப் காண்ட்ராக்ட் கொடுத்துள்ளனர் . அவரும் அதை வேகமாக செய்கிறார்  

அதன் பெறுபேறுதான் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சில திமுகவுக்கு எதிராக தங்களை தொலைக்காட்சி போன்றவற்றில் திமுக வெறுப்பு பிரசாரத்தை செய்கின்றனர்  இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல ஈழத்தில் கூட எந்த செல்வாக்கையும் செலுத்த இவர்களால் முடியாது  சென்ற தேர்தலில் அங்கு சீமான் போன்றவர்களின் ஆதரவு பெற்றவர்கள் பெரிதும் வெற்றி பெற முடியவில்லை.  
அடுத்து கண்களுக்கு தெரிவது அசல் ஆர் எஸ் எஸின் பரிவாரங்கள்  
பாஜகவை ஒரு பிரமிப்போடு பார்க்கும் கூட்டம் அங்கு முளைவிட்டு உள்ளது . குறிப்பாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் சங்கி மாதிரித்தான் தெரிகிறார்
 

இவரின் இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களை கல்யாணம் செய்துள்ளார்கள்  இவரின் குடும்பமே ஒரு சிங்கள குடும்பமாகதான் வளர்கிறது
ஆனால் இவர் புலிகளின் பாணி கடும்போக்குவாதத்தை தற்போது கடைப்பிடிக்கிறார் .இது இவரின் உண்மையான விருப்பம் என்பதிலும் பார்க்க இவர் பாஜக சொல்வதை கேட்கிறார் என்றே தோன்றுகிறது.
 

இலங்கை தமிழர்களின் அரசியலை பாஜகவின்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் முயற்சியே விக்னேஸ்வரன் தலைமையில் நடப்பது போல் தெரிகிறது ..
இவரது கட்சி சென்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது  அடுத்த தேர்தலில் இவரது கட்சி மேலும் வளருமா அல்லது காணாமல் போய்விடுமா என்பது போக போகத்தான் தெரியும்.
 

 பொதுவாக அங்குள்ள தமிழர்களிடையே  திமுகவின் வெற்றி ஒரு காலத்தின் தேவையாக அவர்கள் கருதுவது தெரிகிறது அதை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்  .
திமுகவின் எழுச்சி தங்களுக்கு ஒரு பலம் சேர்க்கும் என்பதில் பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்!
இதுதான் உண்மை .  .  

மறுசீரமைப்புடன் மலையக மக்கள் முன்னணி – பலர் பதவியேற்பு
மலையக மக்கள் முன்னணி

 

கருத்துகள் இல்லை: