புதன், 29 ஜனவரி, 2020

முஸ்லிம் பெண் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் எனப் பதிவு.. ஈரோடு இந்தியன் ஓவசீஸ் ..

bank_pass_bookதினமணி : ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாகக் கணக்குத் துவங்கிய முஸ்லிம் பெண் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவானதால் சர்ச்சை எழுந்தது.
ஈரோடு பெரியார் நகர் வளைவு அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது.< இதை அறிந்து டாக்டர் சலீம் மற்றும் சிலர் சென்று கேட்டபோது, வங்கி ஊழியர்கள் கணினியில் ஏற்பட்ட சிறு கோளாறால் அவ்வாறு பதிவாகிவிட்டது. மென்பொருள் மேம்பாட்டு பணி நடக்கிறது. அதனால் தவறுதலாக அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த வங்கிக் கணக்குப் புத்தக நகல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இப்பிரச்னை அனைத்து தரப்பிலும் அதிகமாக விவாதிக்கப்படுகிறது.   இப்பிரச்னையில் வங்கித் தரப்பில் முறையான பதிலைக் கூறாததால் பிரச்னை நீடித்து வருகிறது. இதனைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளதால், ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை: