புதன், 29 ஜனவரி, 2020

திருப்பதி உண்டியலில் வசூலான 80 டன் சில்லரை நாணயங்களை உருக்க முடிவு

திருப்பதி கோவில்

தொடர்ந்து 2014-ம் ஆண்டு பயன்படுத்தாத நாணயங்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றதால் மாற்ற முடியாது என பல வங்கிகள் முன்வரவில்லை.

இந்நிலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி தங்கம், வெள்ளி, செம்பு என பல்வேறு நாணயங்களை 2600 பிரிவுகளாக பிரித்தார்.

இதில் 25 பைசாவிற்கு கீழுள்ள பயன்படுத்தாத நாணயங்கள் மட்டும் 80 டன் உள்ளது. இந்த 80 டன் நாணயங்களை பாதுகாப்பது தேவஸ்தானத்திற்கு நாளுக்கு நாள் சிக்கலாக மாறி வருகிறது.

இந்நிலையில் இதனை உருக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தானம் அனுமதி கேட்டது. இதையடுத்து ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த நிலையில் சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒரு டன் நாணயம் ரூ.30 ஆயிரத்திற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு 80 டன் நாணயங்களில் முதல் கட்டமாக 40 டன் நாணயங்களை வாகனத்தில் ஏற்றி தனியார் நிறுவனத்திடம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: