tamiloneindia.com : சென்னை: முன்னாள்
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான
டி.ஆர்.பி.ராஜாவுக்கு திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவி தரக்கூடும் எனக்
கூறப்படுகிறது.
திமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட செயலாளராக புதிய பயணத்தை தொடங்கவுள்ளதால் அவரது வெற்றிடத்தை டி,ஆர்.பி.ராஜாவை கொண்டு நிரப்பப்பட உள்ளதாம். திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் வரிசையாக நிகழ்ந்து வருவதால் சீனியர்கள் பலரும் அரண்டு போய் காணப்படுகின்றனர். ஆனால் அதேசமயம் இளைஞர்கள் மத்தியில் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெற்றிடம் திமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ்பொய்யாமொழி அரசியலில் தனது அடுத்தக்கட்ட பயணத்தை விரைவில் தொடங்க உள்ளார்.
திருச்சி மாவட்டச் செயலாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டால் திமுக இளைஞரணியில் அவர் வகித்து வரும் மாநில துணைச் செயலாளர் பதவியிடத்திற்கு வெற்றிடம் ஏற்படும். அந்த இடத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ.வும் ஆக்டிவ் அரசியல்வாதியுமான டி.ஆர்.பி.ராஜாவை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் வாரத்தில் கூட இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மாநில பதவி திமுக முதன்மைச் செயலாளர் பதவியை தன்னிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் டி.ஆர்.பாலுவுக்கு சிறியளவில் தலைமை மீது மன வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கூட வழக்கம் போல் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கலகலப்புடனே பேசிச் சென்றார். ஆனால் முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது மனதளவில் பாலுவுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறதாம். இதனிடையே அவரது மகனுக்கு மாநிலப் பொறுப்பு வழங்குவதன் மூலம் டி.ஆர்.பாலுவை ஓரளவு சமாதானம் செய்ய முடியும் என்பது ஸ்டாலின் நம்பிக்கை.
இதனிடையே இது தொடர்பாக மன்னார்குடியை சேர்ந்த ஐ.டி.விங் நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, டி.ஆர்.பாலு மகன் என்பதற்காக மட்டும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இளைஞரணியில் பதவி கொடுக்க தலைமை முன்வரவில்லை.
கடந்த 9 ஆண்டுகளாக ராஜாவின் செயல்பாடுகளை பற்றி நன்கறிந்த பின்னரே தலைவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறோம்.
மனிதர் சுறுசுறுப்பானவர், தொகுதிக்குள் இருந்தால் ஒரு இடத்தில் இருக்கமாட்டார், பம்பரமாக சுழன்றுகொண்டே தான் இருப்பார். அதனால் அவருக்கு இளைஞரணியில் பொறுப்பு கிடைத்தால் அது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே எனத் தெரிவித்தார்.
டி.ஆர்.பாலுவிடம் இருந்து முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது கட்சியில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, தஞ்சை மாவட்டத்தில் பழனிமாணிக்கம் தரப்புக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாம்.
வெடி வெடிக்காத குறையாக கடந்த ஞயிற்றுக்கிழமை அன்று இதனை கொண்டாடினார்களாம் எஸ்.எஸ்.பி. தரப்பினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக