வெள்ளி, 31 ஜனவரி, 2020

`கனிமொழி : நாங்கள் 10 பேர், அவர்கள் 9 பேர்... பிறகு எப்படி வெற்றி?! கோவில் படி ஒன்றியம்

இ.கார்த்திகேயன் - விகடன் :
சாலை மறியல்``கோவில்பட்டி யூனியன் மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு வெளிப்படையாகப் பேட்டி கொடுத்ததிலேயே மர்மம் உள்ளது” எனக் கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
சாலை மறியலில் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 யூனியன்களில் கோவில்பட்டி யூனியனுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட ஜெயசீலனுக்கு (கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்) நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. கோவில்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 19 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில், 7 தி.மு.க கவுன்சிலர்கள், ஒரு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர், ஒரு சி.பி.எம் கட்சியின் கவுன்சிலர், 4 அ.தி.மு.க கவுன்சிலர்கள், ஒரு முக்குலத்தோர் புலிப்படையின் கவுன்சிலர், ஒரு தே.மு.தி.க கவுன்சிலரும் இதுதவிர 4 சுயேச்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.
இதில், தி.மு.க அணிக்கு 10 பேரும், அ.தி.மு.க அணிக்கு 9 பேரும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குநர் உமாசங்கர் தலைமையில் இத்தேர்தல் நடைபெற்றது. 9-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பூமாரியும் 3-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் கஸ்தூரியும் யூனியன் சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க கவுன்சிலரான கஸ்தூரி 10 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் அலுவலர் அறிவித்தார். ``எங்க பக்கம் 10 கவுன்சிலர்கள் இருக்கும்போது எப்படி அ.தி.மு.க தரப்பு 10 ஓட்டு பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும்?” எனக் கூறி தி.மு.க ஆதரவு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தி.மு.க  கவுன்சிலர்கள் மறியல்




தி.மு.க கவுன்சிலர்கள் மறியல்
இதையடுத்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான கீதா ஜீவன் ஆகியோர் யூனியன் அலுவலகத்துக்குள் வந்து தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டனர். கவுன்சிலர்களிடம் சொன்ன பதிலையே அவர்களிடமும் கூறியதால், கனிமொழி, கீதா ஜீவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துப் பேசிய கனிமொழி, ``தி.மு.க ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக இருக்கும்போது, 9 பேர் எண்ணிக்கை உடைய அ.தி.மு.க தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். அமைச்சர் கடம்பூர் ராஜு, கடந்த மூன்று நாள்களாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `கோவில்பட்டி யூனியனை அ.தி.மு.க நிச்சயம் கைப்பற்றும்' என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறி வந்தார்கனிமொழி உடன் தி.மு.க கவுன்சிலர்கள்




கனிமொழி உடன் தி.மு.க கவுன்சிலர்கள்
தற்போது அவர் சொன்னதுபோலவே ஒரு ஓட்டு குறைவாக உள்ள அ.தி.மு.க தரப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு சந்தேகம் இருப்பதால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டதற்கு `முடியாது’ எனச் சொல்கிறார். இதில், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் தலையீடு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்கும்வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்றார் கொதிப்புடன்.
இதனிடையே, தி.மு.க கவுன்சிலர் சரவணன் என்பவரும் அவரது தாயாரும் மறைமுகத் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தீக்குளிக்க முயன்றனர். இதனால் கனிமொழி நடத்திய போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ``அமைச்சர் கடம்பூர் ராஜுவின் தொகுதியான கோவில்பட்டிக்கு உட்பட்டு கயத்தாறு, கோவில்பட்டி என 2 யூனியன்கள் உள்ளன. இதில், தென் மாவட்டங்களில் எங்குமில்லாத வகையில் கயத்தாறு யூனியனை அ.ம.மு.க கைப்பற்றியது. கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரான சிதம்பராபுரத்தை உள்ளடக்கிய வார்டிலும் அ.ம.மு.க-வே வெற்றி பெற்றது. ``கயத்தாறு யூனியனை தி.மு.க கைப்பற்றியிருந்தாலும்கூட கவலையில்லை.




வெளியேற்றப்பட்ட தி.மு.க கவுன்சிலர்கள்




வெளியேற்றப்பட்ட தி.மு.க கவுன்சிலர்கள்
அ.ம.மு.க கைப்பற்றியது கட்சிக்கே அவமானம். `உங்க சொந்த ஊர் அடங்கிய வார்டிலேயே உங்களால அ.தி.மு.க-வை ஜெயிக்க வைக்க முடியலேன்னா, எப்படி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல்ல இந்தத் தொகுதியில ஜெயிப்பீங்க' என முதல்வரும் துணை முதல்வரும் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான் கோவில்பட்டி யூனியன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதுதேர்தல் நடத்தும் அலுவலருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலியா, இல்லை, நெஞ்சுவலின்னு காரணம் சொல்ல வற்புறுத்தப்பட்டாரான்னு தெரியலை. கயத்தாற்றில் கைவிட்டுப் போனதை, கோவில்பட்டியில் பிடிக்க வேண்டும். கோவில்பட்டி யூனியனும் தி.மு.க வசம் போயிட்டா, நமக்கு மதிப்பு இருக்காதுன்னு மாஸ்டர் பிளான் போட்டார் கடம்பூர் ராஜு. தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து சுயேச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், தி.மு.க-வில் உள்ள அவரது உறவுக்கார பெண் கவுன்சிலர் எனச் சிலரிடம், அ.தி.மு.க அணிக்கு ஆதரவாக வாக்களிக்க கடம்பூர் ராஜு தரப்பிலிருந்து மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.





கவுன்சிலர்கள் தர்ணா





கவுன்சிலர்கள் தர்ணா

ஒருவேளை பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களில் யாராவது ஒருவர் அ.தி.மு.க தரப்புக்கு வாக்களித்திருக்கலாம். இல்லாவிட்டால், அமைச்சரின் தலையீட்டால் அ.தி.முக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கலாம்” என்கின்றனர் விரிவாக

கருத்துகள் இல்லை: