வில்லியனூர்: புதுச்சேரி
தினகரன் :: புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.
ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது நித்தியானந்தா பெயரில் இவர் நடத்திவரும் பேக்கரியில் இருந்த வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 2 இலட்சத்தை வாங்கிக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், காரில் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த வஜ்ரவேலை மீட்டுள்ளனர்.
அவரது தலையில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இருந்தது. இதனால் முகத்தை மூடி, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், வஜ்ரவேலின் சடலத்தை மீட்டு உடர்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக