புதன், 29 ஜனவரி, 2020

BBC :மடகாஸ்கரிலும் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு


அலங்காநல்லூர் முதல் ஆப்பிரிக்கா வரை: மடகாஸ்கரிலும் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு ஆப்பிரிக்காவுக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு நிகழ்வும் அதற்கு சான்றாக இருக்கிறது. “கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம் புல்லாளே ஆய மகள்,” என்கிறது கலித்தொகை. காளையை அடக்காத ஆண்மகனை மறுமையிலும் மணம் செய்ய பெண் விரும்பமாட்டாள் என்பதே இதன் பொருள். இது தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் நிலவிய ஒரு பழக்கத்திற்குச் சான்றாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுதான் இப்போது மடகாஸ்கரிலும் நிலவுகிறது. காளையை அடக்குபவரையே மணம் செய்கிறார்கள் மடகாஸ்கர் பெண்கள்.
இது குறித்து விவரிக்கும் காணொளிதான் இது.


சனி, 14 ஜனவரி, 2017

பீட்டாவுக்கு குஷ்பூ சாட்டை : மடகாஸ்கர் ஜல்லிகட்டை உங்களால் தடுக்க முடிந்ததா?

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை குஷ்பூவுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் டிவிட்டரில் கருத்திட்ட 'பீட்டா' அமைப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தடை காரணமாக ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் 'பீட்டா' அமைப்புக்கு எதிராக, 'மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இந்த விஷயம் எல்லாம் 'பீட்டா' அமைப்புக்கு தெரியாதே என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நேரடியாக குஷ்புவுக்கு டிவிட்டரில் பதிலளிக்கும் விதமாக 'பீட்டா' அமைப்பு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை குஷ்புவுக்கு அனுப்பி, இவ்வாறெல்லாம் காளைகள் துன்புறுத்தப்படுவைத்தால்தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று கூறியது.
அதற்கு குஷ்புவும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் 'ஜல்லிக்கட்டை உங்களால் வேறு எந்த இடத்திலாவது தடை செய்ய முடிந்ததா? மடகாஸ்கர் அரசிடம் அவர்களுடைய ரூபாய் நோட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு  சின்னத்தை நீக்க கோரி பேச முடிந்ததா? என்பதை முதலில் தயவு செய்து கூறுங்கள். ஜல்லிக்கட்டால் நன்மைகள் பல உண்டு.  ஒரு விவசாயி காளை அல்லது பசுவை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை நிரூபிக்க நான் லட்சக்கணக்கில் வீடியோக்களை காண்பிக்க முடியும்.
ஜல்லிக்கட்டில் உங்களால் 5 தவறுகளை கட்ட முடிந்தால் என்னால் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியான விஷயங்களை காண்பிக்கமுடியும். விதிமுறைகளை நாங்கள் மதிப்போம். ஆனால் தடை விதித்தால் ஏற்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார் தினமணி

கருத்துகள் இல்லை: