திங்கள், 18 நவம்பர், 2019

வெளிநாடுகளில் Clean India , Smart City எல்லாம் முதலில் வறுமையை ஒழித்த பின்பே வரும்

சுமதி விஜயகுமார் : இப்பொழுது எல்லாம் வெளிநாடு போய் வருவது ற்றும் வாலிபன்'. இப்போதெல்லாம் படங்களில் வெளிநாட்டில் ஒரு பாடலாவது வைக்காத திரைப்படங்களை எண்ணி விடலாம்.
சகஜம்.
வெளிநாடு செல்லாதவர்கள் கூட திரைப்படங்களில் வெளிநாடு எப்படி இருக்கும் என்று பார்த்து கொள்ளலாம். 'சிவந்த மண்' என்ற திரைப்படம் தான் முதன்முதலில் வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்ட, தமிழில் வெளி வந்த முதல் திரைப்படம். ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட திரைப்படம். படமும் சிறப்பாக இருக்கும் என்றாலும் அது வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்டது என்பதற்காகவே பலரும் அந்த திரைப்படத்தை பார்க்க சென்றார்கள் என்று அம்மா சொல்லுவார். அதன் பிறகு வந்ததுதான் 'உலகம் சு
அப்படி படங்களில் காட்டப்படும் இடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் என்பதால் இன்னும் கவர்ச்சியாகவே இருக்கும். மனிதர்கள் அதிகம் புழங்கும் கல்லூரி, அலுவலகங்கள் இருக்கும் இடங்கள் கூட தூய்மையாய் இருக்கும். நம் நாட்டையும் அது போல் ஆக்குவதற்கு கொண்டு வந்த திட்டங்கள் தான் Clean India , Smart City போன்ற திட்டங்கள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். வெளிநாடுகளில் வறுமையை முடிந்தவரை ஒழித்துவிட்டு தூய்மையை கொண்டு வந்தார்கள். இந்தியாவில் வறுமை பெறுக பெறுக இந்த Clean திட்டங்களை கொண்டுவருகிறார்கள்.

பொதுவாகவே யாருக்கும் அசுத்தமான இடங்களில் வாழ விரும்ப மாட்டார்கள். அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் எல்லா வசதிகளும் இருக்கும் இடத்திலும், மத்திய வர்க்கத்தில் இருப்பவர்கள் ஓரளவிற்கு நல்ல இடத்திலும், அதைவிட வசதி குறைவானவர்கள் நகரின் எல்லை புறத்திலும் வீடுகளை வாங்கி கொள்வார்கள். ஆனால் யாரும் அசுத்தமான இடத்தை விரும்புவதில்லை. இதில் சொந்த ஊரில் வாழ வழியின்றி நகரங்களுக்கு வருபவர்கள் சாலை ஓரத்திலும், மிக அசுத்தமான இடங்களில் குடிசை போட்டும் வாழ்ந்து கொள்வார்கள்.
Clean India என்று கதறும் அரசுகள் (காங்கிரஸும் அடக்கம்) இந்த உழைக்கும் மக்களை பயன்படுத்தி நகரின் வளர்ச்சி அனைத்தையும் முன்னெடுக்கும் அரசு. அந்த இடங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்தவுடன் தனது clean India திட்டத்தை அமல் படுத்தும். வளர்ந்த நாடுகளை போல வறுமையை குறைத்து அனைத்து மக்களுக்கான சுகாதாரம் எல்லாம் கொடுக்காது. மாறாக அசுத்தமாக கருதும் உழைக்கும் மக்களை நகரை விட்டு அப்புறப்படுத்தும். தங்கள் வாழ்வாதாரத்தை அந்த நகரத்தில் அமைத்து கொண்ட அந்த மக்கள், மீண்டும் வேறு நகரம் சென்று முதலில் இருந்து துவங்க வேண்டும். பெரியவர்கள். குடும்பமாக , குழுக்களாக இருப்பவர்கள் கூட பரவாயில்லை. அனாதை குழந்தைகளின் நிலைமை பரிதாபத்திற்குரியது.
அப்படி அகற்றப்படும் மக்களின் நிலங்களில் சாக்கடை அடைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்போ shopping mall லோ கட்டப்படும். நமக்கோ இன்னும் அது வசதியாய் இருக்கும். எதுவரை என்றால் அடுத்த கடும் மழை பெய்யும் வரையோ அல்லது மூச்சு திணறல் ஏற்படும் வரையோ. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்து போதாதென்று இப்போது பழங்குடியினரின் காடுகளையும் அழிக்க துவங்கியுள்ளது இந்த அரசு. அதனால் என்ன நாம் இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பாரித்து pure oxygen maskகுகளை வாங்கி வைத்துக்கொள்வோம். நிலம் மற்றும் தண்ணீரின் உரிமையை என்றோ இழந்துவிட்டோம், காற்றுக்கு வரி கட்டுவது என்ன பெரிய விஷயமா என்ன நமக்கு.
அடுத்த முறை நம் தெருவோரத்தில், நடைபாதையில் கடை போடுபவர்களையோ , வசிப்பவர்களையோ மாநகராட்சி அப்புறப்படுத்தினால் அது சந்தோஷப்பட வேண்டிய விஷயமில்லை, நமக்கான சாவு மணி என்பதை அறிவோம். Clean India என்றால் வறியவர்களை ஒழித்து, பொதுவுடைமையை தனியுடைமை ஆக்குவது என்று மனதில் பதிய வைத்துக்கொள்வோம்.

கருத்துகள் இல்லை: