ஞாயிறு, 17 நவம்பர், 2019

BBC : இலங்கை தேர்தல் முடிவு.. திரு.கோத்தபாயா ராஜபக்சா வெற்றி .. முழு விபரம் ..மாவட்ட வாரியாக விபரம்

கோட்டாபயஇலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்னும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. எனினும், மொத்தம் பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷ 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாஸஇதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார். எனினும், தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.
சஜித் அறிக்கை ! இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்.
விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே சஜித் பிரேமதாஸ இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.


< தான் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக எதிர்கொண்ட தோல்வியை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களுக்கும் சஜித் பிரேமதாஸ இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.
சுதந்திரமாகவும், நீதியானதுமான தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் தான் விரைவில் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

“அமைதியாக கொண்டாட்டம்”

தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிபிசி செய்தியாளர் அசாம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழர் பகுதியில் சஜித் அபார முன்னிலை – தெற்கில் கோட்டாபய முன்னிலை

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
கோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டம்:

சஜித் பிரேமதாச – 3,12,722
கோட்டாபய – 23,261
வன்னி – முல்லைத் தீவு (உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் நடந்த பகுதி):
சஜித் பிரேமதாச – 47,594 (86.19%)
கோட்டாபய – 4,252 (7.70%)
கிளிநொச்சி மாவட்டம்:சஜித் பிரேமதாச – 55,585
கோட்டாபய ராஜபக்ச – 3,238
வவுனியா மாவட்டம்:சஜித் பிரேமதாச – 65,141
கோட்டாபய ராஜபக்ச – 13,715
முல்லைத்தீவு மாவட்டம்:சஜித் பிரேமதாச – 47,594
கோட்டாபய ராஜபக்ச – 4,252 மன்னார் மாவட்டம்:சஜித் பிரேமதாச – 53,602
கோட்டாபய ராஜபக்ச – 6,435

தபால் வாக்குகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அளித்த தபால் வாக்குகளின் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன.
01. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான தபால் வாக்களிப்பின் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 17,961 வாக்குகளை பெற்று முன்னிலையில் திகழ்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தபால் வாக்களிப்பில் 1,563 வாக்குகளை பெற்றுள்ளார்.
தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் வெளியான தபால் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 810 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
02.வன்னி
சஜித் பிரேமதாஸ – 8,402
கோட்டாபய ராஜபக்ஷ – 1,703
அநுரகுமார திஸாநாயக்க – 147
எம்.கே.சிவாஜிலிங்கம் – 144
03.திரிகோணமலை
சஜித் பிரேமதாஸ – 7,871
கோட்டாபய ராஜபக்ஷ – 5,089
அநுர குமார திஸாநாயக்க – 610
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 74
எம்.கே.சிவாஜிலிங்கம் – 49
04.திகாமட்டுல்ல (அம்பாறை)
சஜித் பிரேமதாஸ – 11,261
கோட்டாபய ராஜபக்ஷ – 10,831
அநுர குமார திஸாநாயக்க – 1,134
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 146
05.மட்டக்களப்பு
சஜித் பிரேமதாஸ – 9,221
கோட்டாபய ராஜபக்ஷ – 1,255
அநுர குமார திஸாநாயக்க – 349
06.நுவரெலியா
கோட்டாபய ராஜபக்ஷ – 9,151
சஜித் பிரேமதாஸ – 7,696
அநுர குமார திஸாநாயக்க – 638
07.மாத்தளை
கோட்டாபய ராஜபக்ஷ – 13,405
சஜித் பிரேமதாஸ – 6,165
அநுர குமார திஸாநாயக்க – 987
08.கொழும்பு
கோட்டாபய ராஜபக்ஷ – 21,717
சஜித் பிரேமதாஸ – 8,294
அநுர குமார திஸாநாயக்க – 2,229
09.கம்பஹா
கோட்டாபய ராஜபக்ஷ – 30,918
சஜித் பிரேமதாஸ – 12,125
அநுர குமார திஸாநாயக்க – 3,181
10.களுத்துறை
கோட்டாபய ராஜபக்ஷ – 22,586
சஜித் பிரேமதாஸ – 9,172
அநுர குமார திஸாநாயக்க – 1,912
11.ஹம்பாந்தோட்டை
கோட்டாபய ராஜபக்ஷ – 12,983
சஜித் பிரேமதாஸ – 3,947
அநுர குமார திஸாநாயக்க – 1,731
12.காலி
கோட்டாபய ராஜபக்ஷ – 25,099
சஜித் பிரேமதாஸ – 9,093
அநுர குமார திஸாநாயக்க – 2,450
13.மாத்தறை
கோட்டாபய ராஜபக்ஷ – 19,379
சஜித் பிரேமதாஸ – 5,782
அநுர குமார திஸாநாயக்க – 2,153
14.புத்தளம்
கோட்டாபய ராஜபக்ஷ – 7,645
சஜித் பிரேமதாஸ – 4,685
அநுர குமார திஸாநாயக்க – 764
15.குருநாகல்
கோட்டாபய ராஜபக்ஷ – 45,193
சஜித் பிரேமதாஸ – 23,432
அநுர குமார திஸாநாயக்க – 4,400
16.பொலன்னறுவை
கோட்டாபய ராஜபக்ஷ – 9,285
சஜித் பிரேமதாஸ – 5,835
அநுர குமார திஸாநாயக்க – 1,234
17.அநுராதபுரம்
கோட்டாபய ராஜபக்ஷ – 28,957
சஜித் பிரேமதாஸ – 15,367
அநுர குமார திஸாநாயக்க – 2,740
18.பதுளை
கோட்டாபய ராஜபக்ஷ – 21,772
சஜித் பிரேமதாஸ – 11,532
அநுர குமார திஸாநாயக்க – 2,046
19. மொனராகலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு
கோட்டாபய ராஜபக்ஷ – 13,754
சஜித் பிரேமதாஸ – 6,380
அநுர குமார திஸாநாயக்க – 1,340
20.இரத்தினபுரி
கோட்டாபய ராஜபக்ஷ – 19,061
சஜித் பிரேமதாஸ – 7,940
அநுர குமார திஸாநாயக்க – 1,678
21.கேகாலை
கோட்டாபய ராஜபக்ஷ – 19,869
சஜித் பிரேமதாஸ – 9,868
அநுர குமார திஸாநாயக்க – 1,497
22.கண்டி
கோட்டாபய ராஜபக்ஷ – 34,748
சஜித் பிரேமதாஸ – 16,303
அநுர குமார திஸாநாயக்க – 268

தேர்தல் முறையும் – வாக்கு எண்ணிக்கையும்

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: