ஞாயிறு, 17 நவம்பர், 2019

இலங்கை அதிபர் தேர்தல் கடுமையான போட்டி .... சஜித் பிரேமதாச சற்று முன்னிலையில் உள்ளார். .. விரைவில் முழுமையான முடிவுகள் ..

m.dailyhunt.in : கொழும்பு : இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்.அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில், 35 பேர் போட்டியிட்டாலும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே, 70, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசா, 52, ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது.இந்த தேர்தலில், 1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 845 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பதற்றம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளுக்கு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பு படையினர், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, ஓட்டளிக்க விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.


ஒரு சில சிறிய சம்பவங்களை தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே தேர்தல் நடந்தது.சஜித் பிரேமதாசா, அம்பந்தோட்டையிலும், கோத்தபயா, கொழும்பு விலும், தங்கள் ஓட்டுகளை செலுத்தினர். விறு விறுப்பாக நடந்த ஓட்டுப் பதிவு, மாலை, 5:00 மணிக்கு முடிவடைந்தது. தேர்தலில், 81 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஓட்டு எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, முன்னிலை நிலவரம் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 50.35 சதவீதம் ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய 42.21 சவீதம் பெற்று பின்னடைவில் உள்ளார். கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாச 87.000 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ள தொகுதிகள்யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்லை, காலி, மற்றும் வன்னி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உளள தொகுதிகள் மொனராகலை, கம்பகா, ரத்தினகிரி, மாத்தளை, கொழும்பு, நுவரெலியா, பதுள்ளை, களுத்துறை, பொலன்னறுவை, மற்றும் அப்பாந்தோட்டை .

கருத்துகள் இல்லை: