BBC : மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாகவும், அந்த கட்சியை சேர்ந்த அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வென்று இருந்தது.
சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராக சனிக்கிழமை காலை பதவியேற்றுள்ளார். உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்பதற்கு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் நேற்று வெளியாகின.
எனவே, மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என பரவலாக பேசப்பட்டது. "உத்தவ் தாக்ரே தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகத்துக்கு இடமில்லை. எனினும் இன்னும் சிலவற்றை விவாதிக்க வேண்டியுள்ளது. நாளை செய்தியாளர் சந்திப்பில் விவரங்கள் தெரிவிக்கப்படும்," என்றும் சரத் பவார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக