timestamil :
பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்.
- எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?
-
ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?
-
என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள்.
அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான
வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.
-
மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள்
அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணவி.? 1
மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்?
- மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறைக்கு வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்தது.
-
எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது
மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு
சென்று விட்டார்.
-
தினமும் இரவு 8 மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள்
சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் வைத்து அழுதிருக்கிறாள் எனில்,
அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?
-
எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள்
ஃபாத்திமா, சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன்
பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன
நடந்தது..?
-
சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா
அழுது கொண்டிருக்கும்போது 9:30 வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில்தான்
இருந்திக்கிறார்.
-
எனது மகள் மரணம் குறித்து இதுவரை ஐஐடி அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது
மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐஐடி யின் மாணவர்களோ,
ஆசிரியர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது
ஏன்..??
#JusticeForFathimaLatheefநன்றி: அஹ்மது யஹ்யா அய்யாஷ்
#JusticeForFathima
#IITmadrasKilledFathima
#ArrestSudharsanPadmanaban
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக