/tamil.indianexpress.com : : நடிகரும்,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான
கமல்ஹாசனுக்கு, காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான வியாழக்கிழமை ( நவம்பர் 22ம்...
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான வியாழக்கிழமை ( நவம்பர் 22ம் தேதி), ஆபரேசன் மேற்கொள்ளப்பட உள்ளது.
2016ம் ஆண்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு நிகழ்ந்த விபத்தின் போது கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது காலில் டைட்டேனியம் பிளேட் பொருத்தப்பட்டது.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.
டாக்டர்களின் ஆலோசனைப்படி 22 ஆம் தேதி (இன்று) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல்ஹாசன் நம்மை சந்திப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக