tamil.asiavillenews.com - அபிஷேக் நாகன் :
மேற்கு
வங்கத்தைச்
சேர்ந்த பேராசியர் கர்க சட்டர்ஜி, மாநில உரிமைகள், இந்தி எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஏசியாவில் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
இன்று மாநிலங்களின் உரிமைக்காக ஹிந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் குரலை உயர்த்தி வருவதற்குத் தமிழகமே முன்னோடி. இதை இன்றும் நினைவுகூர்கிறார் வங்காளியான கர்க சட்டர்ஜி. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் இந்தி திணிப்புக்கு எதிராகவும்
, மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதையும் எதிர்த்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
சேர்ந்த பேராசியர் கர்க சட்டர்ஜி, மாநில உரிமைகள், இந்தி எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஏசியாவில் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
இன்று மாநிலங்களின் உரிமைக்காக ஹிந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் குரலை உயர்த்தி வருவதற்குத் தமிழகமே முன்னோடி. இதை இன்றும் நினைவுகூர்கிறார் வங்காளியான கர்க சட்டர்ஜி. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் இந்தி திணிப்புக்கு எதிராகவும்
, மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதையும் எதிர்த்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
திராவிட
இயக்கங்களின் மொழிப் போராட்டமே, வங்காள மொழி போன்ற மொழிகளுக்கான உரிமையைப்
பெற்றுத் தந்தது என்றும் உறுதியாக நம்புகிறார் அவர்.
இந்தியாவைப் போன்ற, மதம், மொழி, வாழ்க்கை முறை என வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் அனைவரும் பயன்படுத்துவதற்கென ஒரு தேசிய மொழி தேவையில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள் ?
இந்திய ஒன்றியம் என்பது பொதுவான நலனுக்காக ஒன்றாக இணைந்துள்ள பன்மொழி தேசியக் குழுக்களின் ஒன்றியம். உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவு பல தேசியக் குழுக்களின் கூட்டமைப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குகிறது. வேலைவாய்ப்புகள், படிவங்கள், தகவல்கள், இணையம் என எல்லாவிதமான மத்திய மாநில அரசுகளின் எல்லா சேவைகளுக்கும் ஒருவரின் தாய் மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை இச்சட்டம் நமக்கு அளித்திருக்கிறது.
இந்தியாவைப் போன்ற, மதம், மொழி, வாழ்க்கை முறை என வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் அனைவரும் பயன்படுத்துவதற்கென ஒரு தேசிய மொழி தேவையில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள் ?
இந்திய ஒன்றியம் என்பது பொதுவான நலனுக்காக ஒன்றாக இணைந்துள்ள பன்மொழி தேசியக் குழுக்களின் ஒன்றியம். உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவு பல தேசியக் குழுக்களின் கூட்டமைப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குகிறது. வேலைவாய்ப்புகள், படிவங்கள், தகவல்கள், இணையம் என எல்லாவிதமான மத்திய மாநில அரசுகளின் எல்லா சேவைகளுக்கும் ஒருவரின் தாய் மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை இச்சட்டம் நமக்கு அளித்திருக்கிறது.
இன்று
உத்தரப்பிரதேசத்தில் பிறந்து இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு இந்த
எல்லா உரிமைகளும் கிடைக்கின்றன. ஆனால் வங்கத்தில் பிறந்த வங்காளிக்கு இதே
உரிமைகள் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதாவது இந்தி பேசாத மாநிலங்களின்
வருவாயைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் இந்திய ஒன்றியம், இந்தி பேசாதவர்களை
இரண்டாம் குடிமகன்களைப் போல நடத்துகிறது.
எத்தனை பேர் அந்த மொழியைப் பேசுகிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல. இங்கு
இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையும் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கையும்
ஒன்றில்லை. அதனால்தான் தமிழர்களுக்கோ, இந்தி பேசுபவர்களுக்கோ,
வங்காளிகளுக்கோ, கன்னடியர்களுக்கோ எண்ணிக்கை அடிப்படையில் உரிமைகள்
வழங்கப்படவில்லை. இந்தியா ஒற்றை நாடாகவிருந்து ‘இந்தியன்’ என்று ஒரு மொழி
இருந்திருந்தால் வேண்டுமானால் எண்ணிக்கை ஒரு பொருட்டாக இருத்திருக்கலாம்.
கர்க சட்டர்ஜி
இந்தி பேசும் மாநிலங்களை எடுத்துக்கொண்டால்,
குறைவான வருவாயை ஈட்டக்கூடிய அதேசமயம் இந்தி பேசாத மாநிலங்களைவிட இரண்டு
மடங்கு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள். மக்கள்தொகை
கட்டுப்பாடு இல்லையென்ற ஒரே காரணத்தினால், பல மொழிக் குழுக்கள் இருக்கும்
ஒரு கூட்டாட்சியில் அவர்களின் கை ஒங்கிவிடாது. இந்தி பேசாத மாநிலங்கள் எந்த
தேசிய மொழியையும் கேட்கவில்லை.
இன்னும்
சொல்லப்போனால் கன்னட தேசியக்குழுவுக்கு கன்னடமே தேசிய மொழி. இந்தி பேசும்
மாநிலங்களுக்கு இந்தியே தேசிய மொழி. இந்திய ஒன்றியம் என்பது பல தேசிய
இனங்கள் கைகோர்த்த மாபெரும் ஒன்றியம். தேசிய மொழி என்று அமித் ஷா இன்று
கையில் எடுத்திருப்பது, 1947 இருந்து இன்று வரை தொடரும் இந்தி ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டம்.
இந்தியால் எதை ஒன்றிணைக்கப்போகிறார்கள்? குஜராத்தி மார்வாடி வணிகர்களை இந்தி பேசாத மாநிலங்களின் சந்தையுடன் இணைக்கவும், இந்தி பேசும் மாநிலத்திலிருந்து புலம்பெயரும் மக்களுக்கு இந்தி பேசாத மாநிலத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்குமான ஏற்பாடு இது.
இதனால்
இந்தி பேசாத மாநிலங்களில் சிறுபான்மையினராக இருக்கும் இவர்களைப்
பெரும்பான்மையினராக்கி இந்தி பேசாத மாநிலங்களை இந்தி பேசும் மாநிலங்களாக
மாற்றிவிடமுடியும். இந்தி பேசாதவர்கள் உயிருள்ளவரை இது நடக்காது.
சமீப
காலமாக வங்கத்தில் “மா துர்கா” என்ற முழக்கம் “ஜெய் ஸ்ரீராம்” என்று
மாறிவருகிறது என அமர்த்தியா சென் கூறுகிறாரே இது குறித்து உங்கள் கருத்து?
மா
துர்காவை ஒரு நாளும் வங்கத்திலிருந்து நீக்கிவிடமுடியாது. எந்த
அந்நியர்களாலும், ஏன் அவர்களின் கடவுள்களாலும்கூட அது முடியாது. தன் கற்பை
நிரூபிக்க அக்கினிப்பிரவேசம் செய்பவரைப் பெண் என்று வங்கம்
ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாகத் தகிக்கிற நெருப்புக்குள் விழவிருந்த பெண்கள் ராஜராம் மோகன் ராயால் காப்பாற்றப்பட்டு மறுமலர்ச்சியடைந்த இடம்தான் வங்கம்.
இந்தி பேசும் மாநிலங்களில் கட்டுக்கடங்காமல் பெருகும் மக்கள்தொகையினால் இங்குப் புலம்பெயருபவர்கள்,
இந்த உயரிய கலாச்சாரம் குறித்த எந்தவிதமான புரிதலுமில்லாமல், வங்கத்தில்
அந்நிய கலாச்சாரத்தைப் பரப்பி வருகிறார்கள். இதுதான் மக்கள்தொகை
படையெடுப்புகளின் பின்னால் உள்ள முக்கிய நோக்கம். வங்கத்தில் பாஜகவின்
பிரதான வாக்குவங்கிகளும் இவர்களே.
ஆகவே
“ஜெய் ஸ்ரீராம்” என்பது வங்கத்தில் நம்பிக்கை சார்ந்து இல்லை மாறாக
வங்கத்துக்கும் வங்க கலாச்சாரத்துக்கும் எதிரான இந்தி ஏகாதிபத்தியத்தின்
கூக்குரல். அவர்கள் தோல் ஜத்ராவை ஹோலியாகவும்,
காளி பூஜையைத் தீபாவளியாகவும், துர்கா பூஜையை நவராத்திரியாகவும், அசைவப்
பிரியர்களான வங்காளிகளை பனீர் உண்பவர்களாகவும் மாற்றப் பார்க்கிறார்கள்.
ஆனால் வங்கத்தில் 87 சதவீதம் வங்காளிகளே, நாங்கள் ஓரணியாக சேர்ந்து
கொண்டிருக்கிறோம். மா துர்கா எங்கள் பக்கமே.
வங்கத்தில்
34 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின்
வீழ்ச்சியையும் பாஜகவின் வளர்ச்சியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
2019ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகளின் வாக்கு சதவீதத்தின் வீழ்ச்சியும்,
பாஜகவுக்கு அதிகரித்த வாக்கு சதவீதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இன்னும்
சொல்லப்போனால் 2019இல் திரிணாமுலின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது
எதைக்குறிக்கிறதென்றால் வலதுசாரி வாக்காளர்கள் திரளாக பாஜகவுக்கு தன் ஆதரவை
அளித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான மனநிலை. வலதுசாரியே வங்கத்தின்
அடையாளம், பாஜக அல்ல.
ஏன் சமீப நாட்களாகவே வங்கத்தில் நடைபெறும் தேர்தல்களில் வன்முறை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது?
வாக்குப்பதிவுகளின்போது வன்முறை என்பது வங்கத்தில் வாடிக்கையான ஒன்றுதான்; குறிப்பாக
ஊராட்சித் தேர்தல்களில் மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதால் மைக்ரோ
லெவல் போட்டிகள் வன்முறைக்கு வழிவகுக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்த நிலையைக் காட்டிலும், இன்று வன்முறையும் உயிர்ப்பலிகளும் கணிசமான
அளவில் குறைந்துள்ளது என்றாலும், இன்றும் இந்த எண்ணிக்கை அதிகமாகத்தான்
உள்ளது. இந்த வன்முறையில் வங்காளிகளின் விலைமதிக்க முடியாத உயிர்கள்தான்
பலியாகின்றன.
அரசியல் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் டெல்லியில் உள்ள இந்தி ஆங்கில ஊடகங்கள்,
வங்கத்தை சட்டம் ஒழுங்கற்ற மாநிலம் போல காண்பிக்கின்றன. இதனால் மத்திய
அரசின் தலையீடு அதிகமாக உள்ள பெருநகர பார்வையாளர்களுக்கு சட்டம் ஒழுங்கற்ற
மாநிலம் போல காண்பித்து தனது முழு அட்டூழியங்களையும் சட்டம் ஒழுங்கு என்ற
பெயரில் கட்டவிழ்த்துவிட முடியும். இது வங்காளிகளுக்கு எதிராக நெடுநாளாகவே
தீட்டப்பட்ட வரும் திட்டம். என்.ஆர்.சி மூலம் வங்காளிகளை வெளியேற்றிவிட்டு
அதை மக்களுக்கு முன்பு நியாயப்படுத்தப்படுகிறது.
ஆனால்,
இந்தி பேசாத மாநிலங்களுக்குக்கிடையில் இருக்கும் சகோதரத்துவத்தின் மேல்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் வங்கத்துக்கும் வங்காளிகளுக்கும்
துணையாக நிற்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
சி.என்.அண்ணாதுரை முன்மொழிந்த கூட்டாட்சி இன்று ஏன் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்களுக்கும், பிராந்திய கட்சிகளுக்கும் இந்த கூட்டாட்சியில் எவ்வளவு தூரம் நம்பிக்கையிருக்கிறது?
இந்தி
பேசாத மாநிலங்கள்தான் இந்திய ஒன்றியத்தின் டி.என்.ஏ என்றார் (அண்ணாவை அவர்
சி.என்.ஏ என்றே அழைக்கிறார்) அண்ணா. அவர் தமிழர்களுக்கான ஹீரோ மட்டுமல்ல.
இந்தி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக விடுதலைக்காகவும்,
சமத்துவத்துக்காகவும், சுயமரியாதைக்காகவும் ஏங்கும் இந்தி பேசாத
மக்களுக்கான விடிவெள்ளிதான் அண்ணா. வங்கத்தில் உள்ள எங்கள் இயக்கமான
பெங்கால் பொக்கோவுக்கும் அவர் அண்ணாதான். நாங்கள் அவரை ஆதர்சமாகக்
கொண்டுள்ளோம், அவரின் அரசியல் கொள்கைகள் இந்திய ஒன்றியம் முழுவதிலும்
பரவுவதற்கான காலம் வந்துவிட்டது.
கூட்டாட்சி
அரசியல் தற்போது மாநிலங்கள் அளவில் உள்ளது. அந்நிய படையெடுப்புகளிலிருந்து
நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான களமாக இது மாறிக்கொண்டிருக்கிறது.
ஏனென்றால் மத்தியில் இந்தி ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கிக்கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணமே இந்தி பேசாத மாநிலங்களுக்கிடையில் ஒற்றுமையும்
சகோதரத்துவமும் இல்லாததே. ஒற்றுமையாக இருந்தால் நம்மால் வெல்லமுடியும்.
நம்மை, உரிமை என்னும் கேடயம் மட்டும் காக்கப்போவதில்லை, சகோதரத்துவம் என்னும் வெற்றி ரகசியமும்தான். நம் உரிமைகளைப் பறிக்கும் இந்தி ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் ஆயுதமும் அதுதான்.
இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று அமித் ஷாவின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அமித்
ஷா மட்டுமல்ல இந்தியை வங்காளிகளின் தொண்டைகளில் திணிப்பவர்கள் யாராக
இருந்தாலும் அவர்களைப் பிட்டத்திலேயே மிதிப்போம். அமித்ஷா அல்லது எந்த
இந்தி ஏகாதிபத்தியவாதிகள் யாரைக் காட்டிலும் எங்கள் தாய்மொழியே எங்களுக்கு
உயிரானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக