மின்னம்பலம் : சவுதி எண்ணெய் ஆலை மீதான தாக்குதலுக்கு பின்னர் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்புகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று(செப்டம்பர் 20) சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை அதிகரிக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்ப ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக பெண்டகனிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியில், முதற்கட்டமாக அமெரிக்கா அளவான எண்ணிகையில் ராணுவத்தை அனுப்புகிறது என தெரிவித்திருக்கிறது. மேலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இராணுவ உபகரணங்களை விரைவாக வழங்குவதற்கான திட்டங்களையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறியதாவது, “சவுதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க ராணுவப் படைகளை நிலைநிறுத்த ஜனாதிபதி(டிரம்ப்) ஒப்புதல் அளித்துள்ளார். இது முதன்மையாக தற்காப்பு, வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பில் கவனம் செலுத்தும். தங்களை தற்காத்துக் கொள்ளும் திறனை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேம்படுத்துவதற்காக இராணுவ உபகரணங்கள் வழங்குவதை அமெரிக்கா விரைவுபடுத்தும், அதற்காக நாங்கள் பணியாற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.
ஏமன் கிளர்ச்சியாளர்கள் அராம்கோ எண்ணெய் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தாலும், அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து புகார் அளித்து வந்தது. இரு தினங்களுக்கு முன் சவுதியில் நடந்த தாக்குதல் எச்சத்தின் தடயங்களை சோதித்த சவுதி ராணுவம், ஈரான் நாட்டின் அடையளங்கள் தங்களுக்கு கிடைத்ததாக செய்தியாளர்களிடம் கூறியது. ஈரானிய டெல்டா விங் ஆளில்லா விமானங்கள் உட்பட மொத்தம் 25 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் அராம்கோ எண்ணெய் ஆலை தாக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவிற்கு ராணுவம் அனுப்புவது தொடர்பாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூறியதாவது, “சரி, மேலே செல்லுங்கள். ஈரானில் உள்ள 15 முக்கியமான இடங்களைத் தாக்குங்கள்- எனக் கூறுவது எனக்கு எளிதான விஷயம். ஆனால் என்னால் முடியுமென்றாலும், அதைச் செய்ய நான் விரும்பவில்லை,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஈரானின் ஆதிக்கம் வலுவாக உள்ள சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிலும் அமெரிக்க ராணுவம் இத்தாக்குதல் மூலம் நுழைகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக