Hemavandhana - tamil.oneindia.com
: சென்னை: "மொத்தம் 7 பெண்களை கல்யாணம் செய்துள்ளேன்.. ஆனால் 24 பெண்களை
காரில் கடத்தி கொண்டு போய் ஜாலியாக இருந்துள்ளேன்" என்று போலீசாரிடம்
வாக்குமூலம் அளித்துள்ளார் போலி போலீஸ்கார இளைஞர் ஒருவர்!
எழும்பூரைச் சேர்ந்த, 19 வயது பெண்ணை காணவில்லை என்று கடந்த ஜுன் 30-ம்
தேதி பெற்றோர்கள் ஸ்டேஷனில் புகார் தந்தபோது, விஷயம் இவ்வளவு சீரியஸ் ஆகும்
என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாதுதான். இதையடுத்துதான்,
ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எழும்பூர் போலீசார், தனிப்படை அமைத்து, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடிய
நிலையில், அமைந்தகரையில் நிதிநிறுவனம் நடத்தி வந்த ராஜேஷ் பிரித்வி,
என்பவர்தான் இந்த பெண்ணை திருப்பூருக்கு கடத்தி உள்ளார் என்பது
தெரியவந்தது.
இளம்பெண்
இந்த நிறுவனத்தில்தான் காணாமல் போன பெண் வேலை பார்த்திருக்கிறார்.
இதையடுத்து, ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை போலீசார்
மீட்டு, கோர்ட் மூலம் பெற்றோரிடமும் ஒப்படைத்தனர். ஆனால் ராஜேஷ் பிரித்ரி
எஸ்கேப் ஆகியிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு வாரகால தேடுதல் வேட்டைக்கு பிறகு ஓனர் ராஜேஷ் பிரித்வி சிக்கினார். இவருக்கு 29 வயசுதான் ஆகிறது. எஸ்ஐ டிரஸ் எஸ்ஐ டிரஸ் போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது. அப்போது அவரிடம் போலீஸ் எஸ்.ஐ. யூனிபார்ம், போலி ஐடி கார்டு, உள்ளிட்டவற்றை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். அவ்வளவு எதற்கு கைவிலங்கு கூட ராஜேஷ் பிரித்வி வைத்திருந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு வாரகால தேடுதல் வேட்டைக்கு பிறகு ஓனர் ராஜேஷ் பிரித்வி சிக்கினார். இவருக்கு 29 வயசுதான் ஆகிறது. எஸ்ஐ டிரஸ் எஸ்ஐ டிரஸ் போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது. அப்போது அவரிடம் போலீஸ் எஸ்.ஐ. யூனிபார்ம், போலி ஐடி கார்டு, உள்ளிட்டவற்றை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். அவ்வளவு எதற்கு கைவிலங்கு கூட ராஜேஷ் பிரித்வி வைத்திருந்திருக்கிறார்.
பிறகு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சொன்னதாவது: நொச்சிப்பாளையம்தான்
என் சொந்த ஊர். 7ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பிழைப்பு தேடி
சென்னைக்கு வந்தபோது, பெண்களை ஏமாற்றி ஜாலியாக இருக்கலாம்ன்னு ஐடியா
பண்ணினேன். அதனால அவர்களிடம் நெருங்கி பழங்கி கல்யாண ஆசை காட்டினேன்..
அவர்களை சீரழித்தேன்.. அப்பவும் என்னால சொகுசான வாழக்கை வாழ முடியல.
அதனால, பேஸ்புக்கில் போலீஸ் எஸ்ஐ. யூனிபார்ம் போட்டு என் போட்டோக்களை
போட்டேன். அப்பதான் நிறைய பெண்கள் என்னிடம் நெருங்கி பேசினார்கள்.
அவர்களையும் ஏமாற்றி நாசம் செய்தேன். இதைதவிர, 'மேட்ரிமோனியல்' மூலமாகவும்
கிடைத்த பெண்களை சீரழித்தேன். எல்லாரிடமும் கல்யாண ஆசைதான் காட்டுவேன்..
மொத்தம் 4 நாள் அவர்களுடன் குடியிருப்பேன். அப்பறம் ஜாலியா இருக்கும்போது
எடுத்த வீடியோவை அவர்களிடம் காட்டியதுமே அரண்டு போய்விடுவர்கள். பிறகு
மெல்ல எஸ்கேப் ஆயிடுவேன்.
24 பெண்கள்
இப்படி பெண்களை ஏமாற்றி, பணம் பறித்தே நிதிநிறுவனம் தொடங்கினேன். அதிலயும்
மோசடி செய்து 30 லட்சம் ரூபாய்க்கு மேலே ஏமாற்றினேன். அங்கே வேலை செய்கிற
பெண்களையும் ஏமாற்றி ஜாலியாக இருந்தேன். இப்படியே மொத்தம் 24 பெண்களை என்
வீட்டுக்கு காரில் கடத்தி வந்து அவர்களை பாழ்படுத்தி உள்ளேன். ஸ்ரீராமகுரு,
தீனதயாளன் என்று என் பெயர்களை சொல்லி 7 பெண்களை கல்யாணம் செய்துள்ளேன்"
என்றார்.
இவர்மீது ஏற்கனவே திருச்சி, கோவை, திருப்பூர் ஆந்திரா என்று ஏராளமான
ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது இவரை புழலில் அடைத்துள்ளனர்
போலீசா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக