திங்கள், 16 செப்டம்பர், 2019

இந்திக்காரர்களின் தூக்கத்தை தொலைத்த தமிழ் ஓசை. உலகம் முழுவதும் ...


Devi Somasundaram  · வட இந்தியர்கள் தமிழையோ , மலையாளத்தையோ ஏன் கற்பதில்லை . .சசி தரூர் .. ஹிந்தி சேட் முழுக்க பொழைக்க வரது தமிழ் நாடு ....அவன் தமிழ் கற்க மாட்டானாம்...நமக்கு ஏன் ஹிந்தி

ராதா மனோகர் : கடந்த நாலைந்து வருடங்களாக இந்திக்காரர்கள் நம்மவர்களோடு ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து ஹிந்தியிலேயே பேச தொடங்குகிறார்கள் .. நம்மவர்களும் ஒரு ஆர்வ மிகுதியால் அல்லது ஹிந்திகாரர்கள் மேலுள்ள அர்த்தமற்ற ஒரு மயக்கம் காரணமாக அரை குறை ஹிந்தியில் அளவளாவுவதை பெருமையாக கொள்கிறார்கள். 
அடிமை புத்தி என்பது நம்மவர்களுக்கு கூடவே பிறந்த நோய். ..
ஆனாலும் உலகம் முழுவதும் ஒலிக்கும் இந்த தமிழ்  ஓசை இந்திக்காரர்களை தற்போது கடுப்பேத்துகிறது .. 
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் வாரவிடுமுறைகளில் தமிழ் வகுப்புக்கள் நடக்கின்றன . அடுத்து தமிழே பேசத்தெரியாத தமிழ் சிறார்களும் தமிழ் படங்களை பார்க்கிறார்கள் அதனாலும் தமிழின் ஓசை பலமாக கேட்கிறது . 
இந்தி உருது காரர்களின் தூக்கத்தை இந்த தமிழின் ஓசை துரத்துகிறது. உலகின் எந்த நகரத்திற்கு சென்றாலும் அங்கே தமிழ் சத்தம் கேட்கிறது . 
அது எப்படி கேட்கலாம்  என்ற கேள்வி ஹிந்தி / உருது வெறியர்களின் நிம்மதியை குலைத்து விட்டது .
தாங்கள்தான் உலக மகா மொழியாளர்கள் என்ற அவர்களின் மமதைக்கு திரும்பும் இடமெல்லாம் சாட்டை அடி கிடைக்கிறது .. 

இந்த காய்ச்சல் தற்போது வெளிப்படையாக தெரிய தொடக்கி இருக்கிறது .தமிழர்களை சந்திக்கும் போதெல்லாம் கூடுமானவரை ஹிந்தியில் பேசி அதை திணித்து விடமுடியுமா என்று முயற்சிக்கிறார்கள் . 

நம்மவர் சிலர் ஆர்வமிகுதியால் பதிலுக்கு அரை குறை இந்தி உருதுவில் பதில் சொல்லும் பாமரத்தனமும் நிகழ்கிறது . நானும் முன்பு அப்படித்தான் . தற்போது அவர்களன் கபடத்தனம் புரிந்ததால் வெட்டொன்று துண்டொன்று என்று கூறிவிடுவேன் ..
இது கனடா ஆங்கிலத்தில் அல்லது பிரஞ்சு மொழியில் பேசு .. உனக்கு தமிழ் தெரிந்தால் தமிழில் பேசு என்று கூறுகிறேன் .. அப்படி கூறினாலும் பலர் வேண்டுமென்றே தொடர்ந்து இந்தியில் சத்தம் போடுவார்கள் .. 
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர்களின் மொழி வெறி புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது ..குறிப்பாக தமிழின் மீதுள்ள துவேசம் . ஏனெனில் காணும் இடமெல்லாம் தமிழ் சத்தம் கேட்கிறதே.. அதுதான் அவர்கள் காய்சல்

கருத்துகள் இல்லை: