சனி, 21 செப்டம்பர், 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?' - தீவிரம் காட்டும் தி.மு.க, அ.தி.மு.க

தி.மு.க - காங்கிரஸ்கலிலுல்லா.ச - vikatan : காங்கிரஸின் நிலைப்பாடு வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், அவர்கள் கட்சி நின்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர் ஹெச்.வசந்தகுமார். நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், பொன்.ராதாகிருஷ்ணனைத் தோற்கடித்து, எம்.பி-யானார். இதையடுத்து, அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், நாங்குநேரி தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.
``இடைத்தேர்தல் வரவிருக்கிறது. திருநாவுக்கரசரிடம் ஒரு வேண்டுகோள். நாங்குநேரித் தொகுதியைத் தி.மு.க-வுக்குக் கொடுக்க வேண்டும்” என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்தார் உதயநிதி. மீண்டும் நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கருத்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

முன்னதாக, வசந்தகுமார். `நாங்குநேரியில் போட்டியிட்டு இரண்டுமுறை வெற்றிபெற்றுள்ளேன். மீண்டும் அங்கே காங்கிரஸ்போட்டியிடும்” என்று கூறியிருந்தார். இரண்டு கட்சிகளுக்குமிடையே இருவேறு கருத்துகள் நிலவிவந்தன.
இந்நிலையில், இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``மகராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி எம்.பியும் நாங்குநேரி தொகுத்க முன்னாள் எம்.எல்.ஏவுமான வசந்தகுமாரிடம் பேசினோம்.
``காங்கிரஸ் நிலைப்பாடு, வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், அவர்கள் கட்சி நின்று வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். இருந்தாலும் கூட்டணி தர்மம் ஒன்று உள்ளது. அதனடிப்படையில் பேசி முடிவெடுத்துள்ளோம்” என்றார். அதேபோல, தி.மு.க சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசுகையில், ``இந்தத் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி ஆனந்தன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் அறிவாலயம் வந்தனர். தொடர்ந்து, தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ``நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள்" எனத் தெரிவித்தார். இது தொடர்பாக தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஆலோசனைக் கூட்டம் என்பது வெறும் சம்பிரதாயம்தான். காங்கிரஸூக்கு நாங்குநேரி, தி.மு.கவுக்கு விக்கிரவாண்டி என்பது முன்பே பேசி வைக்கப்பட்டதுதான். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யவே, இந்த கூட்டம் நடைபெற்றது” என்றனர்.
தி.மு.க சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்த உள்ளனர் என்பது குறித்து விசாரித்தோம்.``விக்கிரவாண்டியை பொறுத்தவரை வன்னியர்கள் அடர்த்தியாக வாழும்பகுதி. அப்படிப்பார்க்கும்போது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதில், ஜெயச்சந்திரன், புகழேந்தி, அன்னியூர் சிவா ஆகிய 3 பேரும் தங்களுக்கு விக்கிரவாண்டி தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுவருகின்றனர். ஜெயச்சந்திரன் மற்றும் புகழேந்தி இருவரும், பொன்முடிக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அதிகம்” என்றனர்.
காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ``வசந்தகுமார் கைகாட்டும் ஒருவருக்குத்தான் நாங்குநேரியில் சீட்டு. இந்து நாடார் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளது” என்கின்றனர்.
இடைத்தேர்தல் குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பார்வை என்ன என்பது குறித்து அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். ``இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிரண்டு நாளில் தலைவர் தனது முடிவை அறிவிப்பார்” என்பதோடு முடித்துக்கொண்டனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க சார்பில் இரண்டு தொகுதிகளை வென்று, எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்,`நிரந்தர சின்னம் கிடைக்கும்வரை இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்
1. *முதலமைச்சர்*
எடப்பாடி பழனிச்சாமி.
*9443146857*.
2. *துணை முதல்வர்*
O. பன்னீர்செல்வம்.
*9655109251. 9843038848*.

3. *பள்ளி கல்வித்துறை அமைச்சர்*
K.A. செங்கோட்டையன் *9442621215. 9443092275*.
4. *கூட்டுறவு துறை அமைச்சர்*
செல்லூர் ராஜு
*9443927555*.
5. *மின்சாரத்துறை அமைச்சர்*
பி.தங்கமணி
*9842740154*.
6. *சட்டத்துறை அமைச்சர்*
சி.வி.சண்முகம்.
*9443326779*.
7. *தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்*
மா.பா.க.பாண்டியராஜன்
*9840879559*.
8. *வருவாய்த்துறை அமைச்சர்*
R.P. உதயகுமார்
*9943911169*.
9. *ஆதி-திரவிடர் நலத்துறை அமைச்சர்*
V.M.ராஜலட்சுமி
*9791561576*
10. *BC மற்றும் சிறுபாண்மை பிரிவு அமைச்சர்*
S.வளர்மதி . *9842470989*.
11. *சமூக நலத்துறை அமைச்சர்*
V .சரோஜா
*9340032299*. *9344772869.*
12. *சுகாதாரத்துறை அமைச்சர்*
C. விஜயபாஸ்கர்
*9894662211*.
13. *வேளாண்மை துறை அமைசசர்*
R.துரைக்கண்ணு
*9443527180.*
14. *மீன்வளத்துறை அமைச்சர்*
D.ஜெயக்குமார்
*9282102950*.
15. *போக்குவரத்து துறை அமைச்சர்*
M.R. விஜயபாஸ்கர்
*9443388155. 9750966601*.
16 . *உயர்கல்வித்துறை அமைச்சர்*
K.P.அன்பழகன் *9444012777. 9443261223.*
17 *ஊரக/நராட்சித்துறை அமைச்சர்*
S.P.வேலுமணி
*8973035555*.
18. *வனத்துறை அமைச்சர்*
திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் *9486133333*.
19. *தொழில் துறை அமைச்சர்*.
M.C. சம்பத்
*9443136395*.
20 *கைத்தறி துறை அமைச்சர்*
O. S. மணியன்
*9444078111*.
21. *உணவுத்துறை அமைச்சர்*
R. காமராஜ் *9842413434*.
22. *சுற்றுசூழல்துறை அமைச்சர்*
K.C. கருப்பண்ணன். *9443347777*. *9865207777*.
23. *கால்நடை பராமறிப்பு துறை அமைச்சர்*
உடுமலை இராதாகிருஷ்ணன் *9842236560.*
24. *செய்தி/விளம்பத்துறை அமைசசர்*
கடம்பூர் ராஜு *9442205002*.
25. *தொழில்/ ஊரகத்துறை அமைச்சர்*
P. பெஞ்சமின் .
*9884995440*.
26. *தொழிலாளர் நலதுறை அமைச்சர்*
நிலோபர் கபில்
*9443329062*.
27. *பால்வளத்துறை அமைச்சர்*
K.T.இராஜேந்திர பாலாஜி
*9443343799*.
28. *வணிக துறை அமைச்சர்*
K.C.வீரமணி *9443341745*
29. *சுற்றுலாதுறை அமைச்சர்*
வெல்ல மண்டி நடராஜன்
*9842405000.*
29. *இந்து அறநிலயத்துறை அமைச்சர்*
ராமசந்திரன்.
*9443328045*.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

The mobile numbers that you updated for Deputy Chief Minister Thiru. O.Panneerselvam belongs to Kalasapakkam MLA Mr. V.Panneerselvam. Please remove both the mobile numbers 9843038848, 9655109251 and acknowledge. Thanks and Regards.