புதன், 18 செப்டம்பர், 2019

சென்னை கத்தியோடு 20 பேர் மோதல் .. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்!

College Students clash in Chennai Beach Station நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்!
tamil.oneindia.com - hemavandhana ; சென்னை: சென்னை பீச் ஸ்டேஷனில் கத்தி, அரிவாளுடன் காலேஜ் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.
ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரி மாணவர்கள் பஸ் தவிர, ரயில்களிலும் காலேஜிக்கு வந்து போவார்கள். அப்படி வரும்போது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடனே ரயிலில் பயணம் செய்வார்கள்.
அப்போது, ஆயுதங்களை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகியதுடன், போலீசாரும் இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.


அதேபோல சமீபத்தில் பஸ்சுக்குள் புகுந்த ஒரு கும்பல் கையில் அரிவாள்களுடன் மாணவர்களை சரமாரியாக வெட்டித் தள்ளியது. நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரவுடிகள் போல மாணவர்கள் மோதிக் கொண்டதைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போயினர்.
இந்நிலையில், திரும்பவும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதிக்கொண்டுள்ளனர். இவர்கள் 20 பேருமே ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் கத்தியுடன் மோதிக்கொண்டதால் பீச் ஸ்டேஷனே பதற்றமானது.
மாணவர்கள் செய்த அட்டகாசத்தினால், அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடியிருக்கிறார்கள். இதையடுத்து தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மாணவர்களை பிடிக்க விரைந்து வந்தனர். ஆனால் அவர்களை பார்த்ததுமே மாணவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டனர்.
ஒரு மாணவர் மட்டும் சிக்கினார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன பண்ணாலும் இவங்களை அடக்கவே முடியலையே என்று பயணிகள் நொந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை: