ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ஜம்மு – காஷ்மீரில் நிலம்; தங்கும் விடுதிகள்!’ – கர்நாடக அரசின் புதிய திட்டம்

PM Modi, Minister raviJammu kashmir>ராம் விகடன் - பிரசாத் : ஜம்மு காஷ்மீரில் கர்நாடக அரசு நிலம் வாங்க உள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது அப்போதைய மன்னர் ராஜா ஹரி சிங் வேண்டுக்கோளுக்கு இணங்க அரசியல் சாசனப் பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அம்மாநில மக்கள் சில சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. காஷ்மீர் மக்களைத் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு சொத்துகள் வாங்க முடியாது.

மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே மாநிலத்தில் செல்லுபடியாகும். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் அங்கு நிலம் வாங்கலாம் என நிலை உருவானது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டரா அரசு ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் தற்போது கர்நாடக அரசு ஜம்முவில் நிலம் வாங்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி தெரிவித்துள்ளார்.



பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ரவி, “ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்குவது தொடர்பாக அமைச்சரைவில் முன்மொழிவை வைக்க இருக்கிறோம். சட்டமன்றத்தில் அனுமதி கிடைத்ததும் மத்திய அரசு மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவோம். ஒப்புதல் கிடைத்ததும் இரு யூனியன் பிரதேசங்களிலும் முதலீடு செய்வோம். சுற்றுலா விடுதிகள் அங்கு கட்டப்படும். இந்த முதலீட்டை கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கவுள்ளோம்” என்றார்.




Minister Ravi
Minister Ravi
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்ய மற்ற மாநிலங்கள் ஆர்வம்காட்டாத நிலையில் பாஜக அரசு ஆட்சி புரியும் இரண்டு மாநில அரசுகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளன. கர்நாடகத்தில் சமீபத்தில்தான் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: