ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ஆச்சி மசாலா பொய் வதந்திகளை நம்ப வேண்டாம் – ..வட இந்திய கம்பனிகள் பொய் பிரசாரம்

aachiSathiyam Digital : மசாலா பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் நிறுவனமான ஆச்சி மசாலா நிறுவனத்தின் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதலால் கேரளாவில் ஆச்சி நிறுவனத்தின் பொருட்களை தடை செய்துள்ளதாகவும் சில பத்திரிக்கைகளில் செய்தி பரவியது.
ஆனால் அந்த பதிவினை முற்றிலும் மறுத்துள்ளது பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆச்சி மசாலா நிறுவனம். இந்த நிகழ்விற்கு பின் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தங்களது பொருட்கள் கேரளா மட்டும் இன்றி இந்தியா முழுவதும் மக்களிடமும், கடைக்காரர்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு.

aachi-press-release
ஆச்சி மசாலாவின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து தற்போது ஆச்சி மசாலா குறித்து தவறான கருத்து வெளியிட்ட நிறுவனங்கள் தங்களது வருத்தத்தையும், மறுப்பினையும் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பு – ஆச்சி நிறுவன பொருட்களை கேரளாவில் விற்க தடையில்லை என்று Kerala Food Authority நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வினை குறித்து ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
Issac
Advertisement
ஆச்சி மசாலாவை வீழ்த்திய இந்திக்காரன்கள்
ஆச்சி மசாலாவில் பூச்சிக்கொல்லி என்ற செய்தி முகநூலில் கிண்டலுக்கும் கேலிக்குமானதாக பரப்பப்படுகிறது < ஆச்சி மசாலாவில் பூச்சிக்கொல்லி வலிந்து கலக்கப்படுவதாக நம்பப்படுகிறது
இதில் நாடார் சமூகம்மீது வண்மம் கொண்டவர்களாலும் தமிழர் விரோதிகளாலும் இதன் உரிமையாளர் கிறித்துவர் என்பதால் இந்து மதவெறியர்களாலும் இந்த செய்தி வைரலாக்கப்பட்டுள்ளது
உண்மையில் நடந்ததென்ன?
ஆச்சி மசாலா உரிமையாளர்கள் வட இந்தியாவிலிருந்து மிளகாய் வற்றல் வாங்குகிறார்கள்
வட இந்திய விவசாயிகள் படிப்பறிவு இல்லாத விழிப்புணர்வு குறைந்தவர்கள்( விவசாயிகள் மட்டும்தானா?)
இவர்கள் கொடூர நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளை பயிர்களுக்கு அடிக்கும்போது
அதன் எச்சம் (residues)காய்ந்த மிளகாய் வற்றலிலும் இருக்கும்.
அனுமதிக்கப்பட்ட அளவில் அதிகமாக பூச்சிக்கொல்லி இருக் க இதுவே காரணம்.
விவசாயத்துறைதான் இந்த பூச்சிக்கொல்லிகளை அனுமதித்து துறை அதிகாரிகள் மூலம் பிரசரமும் செய்கிறது
இந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை
இதற்கு என்ன தீர்வு?
இயற்கை விவசாயத்திற்கு மாறுவது ஒன்றே
ஆச்சி மசாலா தன் குறைகளிலிருந்து மீண்டுவரும்
ஆச்சி மசாலாவுக்கு கைகொடுப்போம் . தமிழர் வணிகர்களை பாதுகாப்போம்
முகநூலில் Ka. Thiruthanikasalam

கருத்துகள் இல்லை: