"அருண் சின்னதுரை -சாய் தர்மராஜ்.ச - ஈ.ஜெ.நந்தகுமார்- விகடன் :
இன்று (செப்டம்பர் 13-ம் தேதி) அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் அவர் ஜீவசமாதி அடையும் நேரம் என அனைவரிடமும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர் பல்வேறு இடங்களில் உள்ள சிவ ஆலயங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இருளப்பசாமி ஜீவசமாதி அடையப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், அவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ஜீவசமாதி அடைய உள்ளதாகவும் வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் பரவியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் அவரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 13-ம் தேதி) அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் அவர் ஜீவசமாதி அடையும் நேரம் என அனைவரிடமும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் அவர் ஜீவசமாதி அடையாததால், கூடி இருந்த பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருவிழா கூட்டம்போல் காட்சியளித்த அந்த இடம் தற்போது ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
இருளப்பசாமியைக் காணவந்த பக்தர்கள் பலரும் காணிக்கைகள் செலுத்தியும் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்கள் வழங்கியும் அவரை வணங்கிக்கொண்டனர். ஜீவசமாதி அடைவதைக் காண்பதற்காகச் சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் அவரிடம் ஆசிபெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக