வெள்ளி, 13 செப்டம்பர், 2019

எனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கணவர்..

 Hemavandhana - tamil.oneindia.com :  அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா கணவரின் மிரட்டல்  கோபி: "எனக்கு ஒரு பொண்ணு வேணும்.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா? பொண்ணு வேணும்னேன்" என்று லாட்ஜ் பெண் ஓனரிடம் அதிமுக முன்னாள் எம்பியின் கணவர் மிரட்டும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன் வீதியை சேர்ந்த தம்பதி சாமுவேல் -  நிர்மலாவுக்கு 45 வயதாகிறது. இவர் கோபியில் கடந்த 12 வருடங்களாக லாட்ஜ் ஒன்றினை நடத்தி வருகிறார். 
இந்நிலையில், நேற்று காலை நிர்மலா வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் வந்துள்ளது. 
முன்னாள் திருப்பூர் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு பேசினார். தான் ரூமில் ஜாலியாக இருக்க பெண் வேண்டும் என கூறி நிர்மலாவை மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது. 
இது சம்பந்தமாக இருவர் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.  
வாசு:  எங்க இருக்கீங்க? சென்னையா ? கோபியா? எப்போ பார்த்தாலும் சோக கீதம் பாடிட்டு இருக்கீங்க? 
 
சென்னையா? பெங்களூரிலேயா இருக்கீங்க? 
நிர்மலா: நான் கோபியில் தான் இருக்கேன். நான் எதுக்கு பெங்களூர் போறேன்? 
 
வாசு: ஒன்னுல்லை.. உங்ககிட்டே கேட்க கூடாது தான். நானும் நீங்களும் எவ்வளவு பிரெண்டுனு உங்களுக்கே தெரியும். உங்க லாட்ஜ்-ல என்ன நடக்குதுனு உங்களுக்கே தெரியும். எனக்கு ஒரு பொண்ணு வேணும். 
 
நிர்மலா: என்ன சொல்றீங்க? என்ன சொல்ல வர்றீங்கனு புரியலை. 
 
வாசு: நிர்மலா காட்டேஜ்ல எல்லாமே நடக்குதுல்ல. பொண்ணு வேணும்னேன். 
நிர்மலா: நீங்க தேவை இல்லாதத பேசறமாதிரி இருக்கு. 
வாசு: உங்களுக்கு தெரியலையா? இல்ல புரியலையா? 
நிர்மலா: நான் காட்டேஜ்க்கு மாதம் ஒருமுறை போயி அக்கவுண்ட் பார்ப்பேன் அவ்வளவு தான். இப்போ எதுக்கு தேவை இல்லாத பேசறீங்கனு புரியல 
வாசு: உங்க காமிராவுல பார்த்துட்டு தான் இருக்கீங்க. என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியும்.அதை எல்லாம் நான் தப்பு சொல்லலை. எல்லா பக்கமும் அது நடக்கிறது தான். 
நிர்மலா: தேவை இல்லாம எதுக்கு என்கிட்டே வம்பா பேசறீங்க? 
வாசு: ஆக்சுவலா உங்க லாட்ஜ்ல இரண்டு வருசத்துக்கு முன்னாடி ரூம் போட்டு இருந்தேன். 
நிர்மலா: எப்போ ரூம் போட்டு இருந்தீங்க? 
வாசு: சூட்டிங் நடக்கும் போது ரூம் போட்டு இருந்தேன். உளவுத்துறை கூட எதுக்காக அங்க ரூம் போட்டீங்க? என்ன சமாச்சாரம்னு விசாரிக்கறாங்க. நீங்கள் கோவப்பட கூடாது. கோவப்படால் வேலைக்கு ஆகாது. அது நிக்காது. 
 
நிர்மலா: கோவப்படக்கூடாதுனு சொன்னால் எப்படி? காலையில் கூப்பிட்டு பொண்ணு வேணும் என கேட்டால் எப்படி? இது நல்லா இருக்கா?
 
 வாசு: அதுதான் அங்க நடக்குதுனு சொல்றாங்க.
 
 நிர்மலா: 12 வருஷமா லாட்ஜ் நடத்துறேன். போலீசார் கூட தங்கறாங்க. போறாங்க. அவங்க கொண்டே கூட ஐடி கார்டு வாங்கிட்டு தான் ரூம் கொடுக்கறேன். ஒரு நாளைக்கு 3 தடவை போலீசார் செக் பண்றாங்க. 
 
வாசு: அது தான் அங்க என்ன நடக்குதுனு கேட்கறாங்க. நிர்மலா: இப்போ தங்கறவங்க கிட்டே கேட்காமல் 2 வருசத்துக்கு முன்னாடி தங்குன உங்க கிட்டே எதுக்கு கேட்கறாங்க? வாசு: என்னிடம் கேட்க மாட்டாங்கனு என்ன இருக்கு? 
 
நிர்மலா: இப்போ எதுக்கு தேவை இல்லாம தலையிடறீங்க? கவுரவமா 12 வருசமா நடத்திட்டு இருக்கேன். இப்போ எவன் பேச்சை கேட்டு இந்த மாதிரி பண்றீங்கனு தெரியலை. 
 
வாசு: நான் யார் பேச்சையும் கேட்டு பேசலை. நீங்க வெய்ட் பண்ணுங்க. அங்க ஏதாவது தப்பா நடந்தா அடுத்த செகன்டே கேசு ஆயிடும். 
 
நிர்மலா: ஆயிட்டு போதுங்க. அப்படி இருந்தா இவ்வளவு போலீசார் இங்க தங்க மாட்டாங்க. என்னமோ தேவை இல்லாமல் தலையிட்டுட்டு இருக்கீங்க. 
 
வாசு: நான் தேவை இல்லாமல் தலையிடல. உங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லைனா விட்ருங்க.. பார்த்துக்கலாம் நிர்மலா: உங்களை பார்த்தே 2 வருசமாச்சு. எவன் காசு கொடுத்து இந்த மாதிரி பண்ண சொன்னான்? உங்களுடைய இருக்கும் இவ்வளவு கேவலமா நடந்து இருக்க கூடாது.

Read more at: https://tamil.oneindia.com/news/erode/ex-mp-sathyabama-husbands-controversy-audio-362733.html

கருத்துகள் இல்லை: