தினமணி :ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் `காவேரி
கூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.
கூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.
அந்த இயக்கம் குறித்து பிரசாரம்
செய்வதற்காக பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் தலைக்காவிரியில்
தொடங்கி திருவாரூரில் முடியும் இந்தப் பயணத்துக்கு ஜக்கி வாசுதேவ்
பயன்படுத்துவது ஹோண்டா VFR 1200X எனும் விலை உயர்ந்த பைக். இந்த பைக்கின்
விற்பனை இந்தியாவில் கிடையாது. இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறார்.
தொலைதூரப் பயணங்களுக்காகவே
வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில் 1237cc V4 இன்ஜின் உள்ளது. 127bhp
பவர் மற்றும் 12.6Kgm டார்க் தரக்கூடிய இன்ஜின் இது. வழக்கமாக பைக்குகளில்
வரும் செயின் டிரைவுக்குப் பதிலாக ஷாஃப்ட் டிரைவ் இதில் உண்டு.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே. கார்களைப் போல மேனுவல் மோடில் வைத்தும்
ஓட்டலாம். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்கிரீன், IMU சென்சார்கள்,
முன்பக்கம் டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட கம்பைண்ட் ஏபிஎஸ், டிராக்ஷன்
கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட பைக் இது.
இதில், ஸ்டிக்கரிங் மற்றும் ஹெட்லைட்டை
மாற்றியமைத்துப் பயன்படுத்தி வருவது தெரிகிறது. CBU முறையில் இறக்குமதி
செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.19
லட்சம். ஆன்ரோடு விலை ரூ.25 லட்சத்துக்குள் இருக்கலாம்.
பிரபல யோகா குருவான ஜக்கி வாசுதேவ் ஒரு
பைக் ப்ரியர். ஏற்கெனவே, டுகாட்டி ஸ்க்ராம்பிளர் டெசர்ட் ஸ்லெட், BMW
RG1200s போன்ற விலை உயர்ந்த பைக்குகளை பயன்படுத்தியுள்ளார்.
சென்ற ஆண்டு `நதிகளை இணைப்போம்'
பயணத்துக்காக 80 லட்சம் விலையுள்ள மெர்சிடீஸ் பென்ஸ் GL63 AMG என்ற லக்ஸூரி
வாகனத்தில் இந்தியாவைச் சுற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக