ஆசிட் வீசிய மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜான்சிராணி பேட்டி!
nakkheeran.in - kalidoss : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழன்(20) கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவானி(19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. உறவினர்களான இவர்கள் இருவரும் உடற்கல்வி இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். காதல் பிரச்சனையால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திங்கள்கிழமை மாலை 08.00 மணியளவில் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அருகே முத்தமிழன் கையில் மறைத்து வைத்திருந்த வீட்டுக்கு உபயோகப்படுத்தும் ஆசிட்டை மாணவியின் மீது வீச்சினார்.
இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் மாணவி அலறியதால் அருகில் இருந்தவர்கள் மாணவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் இருவரையும் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ஜான்சிராணி, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, மாதர் சங்க நகர்குழு உறுப்பினர் அமுதா, மாணவர் சங்க மாநில நிர்வாகி குமரவேல் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சம்பந்தபட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சிராணி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிக ஆபத்து இல்லையென்றாலும் வாய் பேச முடியாத நிலையில் தொண்டை மற்றும் கண் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை இந்த மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டும். காவல்நிலையம் அருகில் இருந்தும் பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற செயல்கள் நடப்பது வருத்தம் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் படங்கள் மற்றும் அவரது பெயரை முழுவிலாசத்துடன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனால் அவர்களது பெற்றோர்கள் இதனை நாட்டுக்கே தெரியவைத்து அசிங்கபடுத்திவிட்டார்கள் என மன உளைச்சல் அடைகிறார்கள். இது போன்று பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களையும் முழு அடையாளத்தையும் வெளியிடகூடாது என்று விதி இருந்தும் சில ஊடகங்கள் வெளியிடுகிறது. அவர்கள் இது போன்ற செயலை நிறுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
ஆசிட் வீசியவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக