திங்கள், 9 செப்டம்பர், 2019

மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி..... 2ஜி வழக்கு விசாரணையில் ஆசீர்வாதம் ஆச்சாரியை வறுத்தெடுத்த ... flashback

BA LA : டில்லி பட்டியாலா நீதிமன்றம்....நீதிபதி று பாருங்கள் என்று சொல்ல...மொத்த நீதிமன்றமே அதிர்ச்சி.... பதட்டம்.....பின்னர் சூழ்நிலை சற்று அமைதியாக, அந்தக் குரல் நீதிமன்றத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு வருகிறது..." என்ன "மிஸ்டர். ஆசிர்வாதம் ஆச்சாரி" , உங்கள் நாடகம் முடிந்ததா? நாம் விசாரணையை தொடங்கலாமா? உங்கள் நடிப்பால், நீதிபதியையும் இங்கே உள்ள பத்திரிக்கையாளர்களையும் கூட ஏமாற்றலாம்....நான் ஏமாறமாட்டேன்..." என்று சொல்லிவிட்டு கர்ஜித்து சிரித்தார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி.....
ஷைனி நீதிமன்றத்திற்குள்
நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தார், உடனே.... "என்ன கொலை செய்ய ஒருவன் நீதிமன்றத்திற்குள் வந்திருக்கிறான், அதோ அந்த இடத்தில் அமர்ந்திருந்தான், நான் அவனை பார்த்தேன், நீதிபதி அய்யா என்னை காப்பாற்ற வேண்டும்... அய்யோ..." என்று 2G வழக்கு சாட்சி சத்தமாக அலறினார். நீதிபதி ஒரு நிமிடம் திடுக்கிட, வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் சற்று அதிர்ச்சி அடைய, காவலர்களை அழைத்த நீதிபதி இந்த வளாகத்தில் அந்த நபர் இருக்கிறாரா என்
எல்லோரும் ஆச்சர்யமாக அவரை பார்க்க... நீதிபதியும் ஒரு சந்தேகத்துடன் பார்க்க... தொடர்ந்தார் ஜெத்மலானி " அது வேறொன்றுமில்லை நீதிபதி அவர்களே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரது பெயில் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது, இங்கே இப்படி ஒரு நாடகத்தை நடத்தினால்... 'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெயில் கொடுத்தால்' சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற சந்தேகத்தின் அடிப்பையில் பெயில் மனு நிராகரிக்கப்படும்.
அதற்காகத்தான் நம்ம ஆச்சாரி இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்..." என்று முடிக்கும் போது...மொத்த நீதிமன்றத்தின் சூழ்நிலையும் மாறிவிட்டது... "இல்லை...கொலை செய்ய வந்தவரை நான் பார்த்தேன்..." என்று கொஞ்சம் தயங்கிய நிலையில் ஆச்சாரி மீண்டும் சொல்ல... "ஆச்சாரி, உனக்கு இந்த நாடகத்தின் ஸ்கிரிப்ட்டை யார் சொல்லிக்கொடுத்தது என்பது முதல் அனைத்தும் எனக்கு தெரியும்...உன்னோட டிராமாவுக்கு இனி இது அரங்கம் கிடையாது.... இது மாதிரி எவ்வளவு டிராமா பாத்திருப்பேன்...இனி நான் கேள்வி கேக்குறேன் ...நீ பதில் சொல்லு...விசாரணை ஆரம்பம்... நீயா நானான்னு பாக்குறேன்னு..." என்று சொல்ல...
ஆச்சாரி "நீதிபதி அய்யா..." என்று இழுக்க... "ஆச்சாரி இனி நீ என் கண்ணை பாத்துதான் பேசனும்..." என்று விசாரணையை தொடங்கி மொத்த நீதிமன்றத்தையும் தனது கட்டுக்குள் கொண்டுவந்தார்.....
அவர் 'ஜெத்மலானி' அல்ல 'கெத்மலானி'

கருத்துகள் இல்லை: