வெப்துனியா : தமிழ் சினிமாவில் '80' களில் பிரபல நடிகராக அறியப்பட்டு, சமீப
காலம் வரை சின்னத்திரையிலும் நடிகராக இருந்த ராஜசேகர், இன்று, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
பாலைவன சோலை என்ற படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கினர்.
அதன் பின்னர், ராஜசேகர் தனித்து இயக்கிய மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம் ஆகிய படங்களை இயக்கி மக்களிடம் பிரபலமானார்.
இதையடுத்து, பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் என்ற படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல நடிகரானார். அதுமுதல் சமீபத்தில் முன்னணி தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துவந்தார் ராஜசேகர்.
அண்மையில், உடல்நலக் குறைவால், அவர் , ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் , சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் காலமானார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக