வெள்ளி, 13 செப்டம்பர், 2019

இன்னும் எத்தனை பேர் பேனர்களுக்காக உயிரை விடவேண்டும் ? நீதிமன்றம்

Subasrivikatan.com - கலிலுல்லா.ச : இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது. ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா?
 டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக அரசு மீது டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷாயி ஆகிய அமர்வு விசாரித்தது. அப்போது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ``பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ஏன் சென்சிடிவிட்டி இல்லாமல் இருக்கிறார்கள்? இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது.
ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகிவிடவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா, பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா. அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிமன்றத்தால், அதைச் செயல்படுத்தும் தகுதி இல்லை என நினைக்கிறீர்களா?

அரசோ, கட்சியோ கருணைத்தொகை கொடுக்கிறது. யாரோ ஒருவர் மீது வழக்கு பதியப்படுகிறது. மனித உயிருக்கு மதிப்பே இல்லை. கோவையில் இளைஞர் மரணம் போன்ற சம்பவம்தான் நேற்றைய சம்பவமும்” என்று கடுமையாக சரமாரி கேள்விகளை எழுப்பினர்.





`அவளின் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது!'- பேனரால் உயிரிழந்த ஐ.டி நிறுவன ஊழியரின் தந்தை கதறல்அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், `இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். அதற்கு நீதிபதிகள், ``நீதிமன்ற உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்பதில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். காஞ்சிபுரம், பூந்தமல்லி, கோயம்பேடு என அ.தி.மு.க-வினர் வைத்த பேனர்கள் உள்ளிட்ட அனைத்து பேனர்கள் குறித்தும் டிராஃபிக் ராமசாமி புகைப்படங்களுடன் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சிகள் பேனர் வைக்க தடைவிதித்தும், பதிலளிக்க உத்தரவிட்டும் யாரும் பதிலளிக்கவில்லை. பேனர் வைக்கக் கூடாது என ஒரு அறிவிப்பு கூட செய்யவில்லை. மெரினா சாலை மீடியனில் அரசியல் கட்சி கொடி வைக்க யார் அனுமதித்தார்கள். அரசியல் கட்சிகள் கூடுதல் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றவர்களா?” என்று கண்டனம் தெரிவித்தனர்.



banner



banner
அரசு தரப்பு வழக்கறிஞர், ``பேனர் விவகாரத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க இரண்டு நாள் அவகாசம் தேவை” என்று தெரிவித்தார். நீதிபதிகள், `` ஒரு குற்றம் நடக்க அனுமதிக்கிறீர்கள். அதன்பின் குற்றவாளிகளின் பின்னால் ஓடுகிறீர்கள். விதிமீறல் பேனர் வைக்கும்போது உங்க அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை. எங்கிருந்தார்கள். `விதிமீறல் பேனர்கள் வைக்கக் கூடாது எனவும், வைக்க மாட்டோம் எனவும் முதல்வர் அறிக்கை விடலாமே?’ என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ``பேனர் வைக்கக் கூடாது எனக் கட்சியினருக்கு தி.மு.க தலைவர் கூட ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கிறார்” என்று தி.மு.க வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த கண்டனத்துக்குப்பிறகு, `பேனர் வைத்தால் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்மாட்டேன்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுளார். அதேபோல டி.டி.வி.தினகரனும் `பேனர் வைக்கவேண்டாம்’ என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அ.தி.மு.க தரப்பில், `மக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையிலான பேனர்கள் வைக்கவேண்டாம்’ என உத்தரவிடபட்டுள்ளது

கருத்துகள் இல்லை: